கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாக வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தின் ப்ரீக்குவலாக (முந்தைய அத்தியாயமாக) இப்படம் உருவாகியுள்ளது இப்பாகம். சமீப காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கன்னட மொழிப்படமான ‘காந்தாரா: அத்தியாயம் 1’, அடுத்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக, ஹோம்பாலே ஃபில்ம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தத் திரைப்படம் காந்தாரா உலகின் கடந்த காலத்திற்கு பார்வையாளர்களை கூட்டிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரம்மாண்டமான, மண்சார்ந்த சினிமா அனுபவங்களுக்கு பெயர் பெற்ற ஹோம்பாலே ஃபில்ம்ஸ், வரலாற்றுச் சிறப்புமிக்க கடம்பப் பேரரசை மீண்டும் உருவாக்கி, மர்மம் நிறைந்த சகாப்தத்தில் பார்வையாளர்களை மூழ்கடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை இயக்கி நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டி, தன் கதாப்பாத்திரத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்க, கேரளாவின் பழமையான தற்காப்பு கலை வடிவங்களில் ஒன்றான களரி சண்டையில் கடுமையான பயிற்சி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொங்கன் நாட்டுப்புற வாழ்வியலின் செழுமையை உலகுக்கு அறிமுகப்படுத்தியது காந்தாரா: பாகம் 1. அதன் கவர்ச்சியான கதை, மூர்ச்சடைய வைக்கும் காட்சிகள் மற்றும் இதயப்பூர்வமான நடிப்பால், படம் இந்திய எல்லைகளுக்கு அப்பால் பார்வையாளர்களை கவர்ந்தது.
உள்ளூர் மரபுகளை மிக அழுத்தமான கதையாடலில் உண்மையாக சித்தரித்த இப்படம், உலகளாவிய ரசிகர்களை ஈர்த்து, ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. அதன் முந்தைய கால கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள, இரண்டாம் பாகமான, ‘காந்தாரா: அத்தியாயம் 1’ படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ள நிலையில், எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.