நடிகர் சேதுவுக்கு என்ன ஆச்சு?

நடிகர் சேதுவுக்கு என்ன ஆச்சு?
நடிகர் சேதுவுக்கு என்ன ஆச்சு?
Published on

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ நடிகர் சேது, தனது ஃபேஸ் புக்கில் ’தனக்கு முதுகு தண்டில் அறுவைச் சிகிச்சை முடிந்து வீடு திரும்புகிறேன்’ என்று ஒரு புகைப்படத்தை வெளிட்டிருக்கிறார்.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’வில் நடிகர் சந்தானத்துக்கு நண்பனாக வந்தவர் சேது. அடிப்படையில் மருத்துவரான இவர் சந்தானம் நட்பு மூலம் சினிமாவுக்குள் எண்ட்ரி கொடுத்தார். ஒரு பக்கம் நடிப்பு இன்னொரு பக்கம் மருத்தவர் என சுறுசுறுப்பாக இருந்தவர் சேது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக வேலை பார்த்து கொண்டே சினிமா என கலகலப்பாக வாழ்க்கையை தொடர்ந்து வந்தார். 

ஒருசில வருடம்  முன்புதான் இவருக்குத் திருமணம் நடந்தது. திடீரென்று  நேற்று தனது ஃபேஸ் புக்கில் ’தனக்கு முதுகு தண்டில் அறுவைச் சிகிச்சை முடிந்து வீடு திரும்புகிறேன்’ என்று ஒரு புகைப்படத்தை வெளிட்டிருக்கிறார். இந்த வாழ்க்கையில் பணம் என்பது சின்ன விஷயம் என்றும் வாழ்க்கைதான் முக்கியம் என்றும் பதிவிட்டு உள்ளார். இந்த சோதனையான தருணத்தில்தான் என்னை சுற்றி எவ்வளவு நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொனிருக்கிறேன் என உணர்ச்சிகரமாக எழுதியிருக்கிறார் சேது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com