‘மண்தொடா மண்டியிடா..’ - ரூ.100 கோடி வசூலை கடந்து மிரட்டும் கங்குவா!

கங்குவா திரைப்படம் 3 நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கங்குவா
கங்குவாweb
Published on

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான படம் ‘கங்குவா’. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, ரெடின்ஸ் கிங்க்ஸி என பலர் நடித்துள்ளார். யுவி கிரியேஷன்ஸ், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையத்திருக்கிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் நிலையில், மதன் கார்க்கி வசனங்களை எழுதியுள்ளார். நிசாத் யூசூப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா படமானது தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உட்பட மொத்தம் 10 மொழிகளில் நவம்பர் 14 அன்று வெளியானது.

கங்குவா
கங்குவாpt web

1000 கோடி, 2000 கோடி என்று அதிகப்படியான எதிர்ப்பார்ப்பில் வெளியான கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ஒரு தரப்பு படம் நன்றாக இருக்கிறது என்றாலும், மறுதரப்போ படம் சுமார் என்றே தெரிவித்து வருகிறது. படத்தில் சத்தம் அதிகமாக இருக்கிறது என்று குறை சொல்லப்பட்ட நிலையில், அதனை குறைக்கும் நடவடிக்கையில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டது.

இந்நிலையில் படத்தின் 3வது நாள் உலகளாவிய வசூலை தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கங்குவா
“ரசிகையாக மட்டுமே இதைச் சொல்லுகிறேன்; கங்குவா மீது இவ்வளவு எதிர்விமர்சனங்கள் ஏன்?” - ஜோதிகா ஆதங்கம்

3 நாளில் ரூ.100 கோடி வசூல்..

முன்னதாக ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படத்திற்கு முதல் நாள் வசூல் ரூ.58.62 என தெரிவிக்கப்பட்டது. பெரிய அளவில் சம்பவம் செய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்ட திரைப்படம் விமர்சன ரீதியாக பாதிகப்பட்டதால் அது வசூலிலும் பிரதிபலித்தது.

கங்குவா
கங்குவா: விமர்சனங்களை கடந்து வசூலில் சாதனை... முதல்நாள் விவரத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

இத்தகைய சூழலில் கங்குவா படத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்புவதாகவும், படத்தில் இருக்கும் நல்ல விசயங்களை பற்றி ஏன் யாருமே பேசவில்லை என சூர்யாவின் மனைவி ஜோதிகா ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவரை தொடர்ந்து பலபேர் கங்குவா படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கங்குவா
“ரசிகையாக மட்டுமே இதைச் சொல்லுகிறேன்; கங்குவா மீது இவ்வளவு எதிர்விமர்சனங்கள் ஏன்?” - ஜோதிகா ஆதங்கம்

இந்நிலையில் படத்தின் 3 நாள் வசூலை தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியா க்ரீன் அறிவித்துள்ளது. அதன்படி கங்குவா திரைப்படம் 3 நாள் முடிவில் உலகளவில் ரூ.127.64 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கங்குவா
கார்னர் செய்யப்படும் சூர்யா? தனிமனித தாக்குதலின் பிடியில் கங்குவா.. சினிமா விமர்சகர் கோடங்கி கருத்து

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com