கமல்ஹாசன் நடித்துள்ள ’விக்ரம்’ படம் ரூ. 172 கோடியே 50 லட்சத்திற்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ’விக்ரம்’. இதில், அவருடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதேபோல், நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் வருகிறார். ஆக்ஷன் பார்முலாவில் எடுக்கப்பட்டிருக்கும் ’விக்ரம்’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் படத்தின் பட்ஜெட் அதிகமானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தின் வியாபாரம் பெரிய அளவில் நடைபெற்றுள்ளதாக திரைத்துறையினர் கூறுகின்றனர்.
குறிப்பாக, தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது. அதற்கான, மதிப்பு 35 கோடி ரூபாய் என கணக்கிட்டுள்ளனர். அதேபோல், கேரள உரிமையை ஷிபு தமீம் 5.50 கோடிக்கும், தெலுங்கு உரிமையை நடிகர் நிதின் தந்தையுடைய Sreshth Movies நிறுவனம் 5.50 கோடிக்கும், கர்நாடக உரிமையை கற்பக விநாயகா ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் 4.25 கோடிக்கும் கைபற்றியுள்ளனர்.
அதேபோல், அனைத்து மொழிகளுக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் ரூ.93 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது. இது தவிர பாடல் உரிமம் 4.25 கோடிக்கும். வெளிநாட்டு உரிமை 25 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம், 172 கோடியே 50 லட்சத்திற்கு விக்ரம் படத்தின் வியாபாரம் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ‘விக்ரம்’ அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ளது. அதற்கு, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோரின் கூட்டணியும் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.