சரோஜா தேவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது

சரோஜா தேவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது
சரோஜா தேவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது
Published on

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசினால் ஆண்டுதோறும் கலை மற்றும் பண்பாட்டினை வளர்த்தெடுக்கவும் தொன்மையான கலைவடிவங்களை பேணவும் கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படும். 

அந்த வகையில் 2019 மற்றும் 2020 ஆண்டிற்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, சௌகார் ஜானகி, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ஐசரி கணேஷ், நடிகர் சிவகார்த்திகேயன், ராமராஜன், பின்னணி பாடகி ஜமுனா ராணி ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், யோகிபாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவ தர்ஷினி, சங்கீதா, டிவி நடிகைகள் நித்யா, சாந்தி வில்லியம்ஸ், டிவி நடிகர் நந்தகுமார் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இசையமைப்பாளர்கள் டி.இமான், தினா, இயக்குநர்கள் கவுதம் மேனன், மனோஜ்குமார், ரவிமரியா, லியாகத் அலிகான், வசனகர்த்தா பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, நடன இயக்குநர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், சண்டைப்பயிற்சியாளர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது அறிவிக்கப்பட்டவர்கள் நாளை மாலை 5 மணிக்கு தலைமை செயலகம் வரவும் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com