விஜய் தேவரகொண்டாவுடன் தெலுங்கில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் அறிமுகமாகிறார்.
விஜய் தேவரகொண்டா - அனன்யா பாண்டே- மைக் டைசன் நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லைகர்’ வரும் ஆகஸ்ட் மாதம் உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில், போனிகபூர்- ஸ்ரீதேவியின் மகளான நடிகை ஜான்வி கபூர், விஜய் தேவரகொண்டாவின் அடுத்தப் படத்தில் நாயகியாக தெலுங்கில் அறிமுகமாகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
’ஜன கன மன’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கரண் ஜோகர் தயாரிக்கவுள்ளார் என்றும் பிப்ரவரியில் அமெரிக்காவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. ‘லைகர்’ படத்தினைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் பூரி ஜெகன்நாத்தே இயக்குகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு கரண் ஜோகர் தயாரித்த ‘தடக்’ படத்தில்தான் ஜான்வி கபூர் நாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் தேவரகொண்டா-ஜான்வி கபூர் இணையும் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் தற்போது படக்குழு ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே, பாலிவுட் நடிகைகளான ஆலியா பட் ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திலும் கியாரா அத்வானி ஷங்கரின் ‘ராம்சரண் 15’ படத்திலும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.