தனது கணவர் ராஜகோபாலன் கொலைவழக்கில், சரவணபவன் ராஜகோபாலனுக்கு எதிராக 18 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்திய ஜீவஜோதியின் வாழ்க்கை படமாகிறது.
கடந்த 2001-ஆம் ஆண்டு தமிழகத்தையே பெரும் பரபரப்பூட்டியது ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தக்குமார் கொலை வழக்கு. ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தக்குமாரை ஆட்களை வைத்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார் சரவணபவன் ராஜகோபாலன். உச்சநீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜகோபாலன், தண்டனையை அனுபவிக்காமலேயே உயிரிந்தார். ஆனால், அவருக்கு தண்டனை வாங்கித் தருவதில் 18 ஆண்டுகாலம் உறுதியோடு சட்டப்போராட்டம் நடத்தினார் ஜீவஜோதி.
தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தை தற்போது படமாக்கவுள்ளது பாலிவுட்டின் ஜங்கிள் பிக்சர் தயாரிப்பு நிறுவனம். இதனை திரைக்கதையாக மாற்ற திரைக்கதை ஆசிரியர் பவானி ஐயர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் இயக்குநர், நடிகர்கள் குறித்த விபரங்கள் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள்.