‘கோமாளி’ பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி

‘கோமாளி’ பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி
‘கோமாளி’ பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

ஜெயம் ரவியின் ‘கோமாளி’ பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

 கன்னட நடிகையான சம்யுக்தா ஹெக்டே தமிழில் ‘பப்பி’, ‘வாட்ச்மேன்’, ‘கோமாளி’ உள்ளிட்டப் படங்களில் நடித்திருக்கிறார். ஜெயம் ரவியின் ’கோமாளி’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து படம் முழுக்க காமெடியில் கவனம் ஈர்த்தார். இவருக்கும் ஜெயம் ரவிக்குமான ’நான் சும்மாவே சீனு டி’ பாடல் வைரல் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவின் இரண்டாவது அலையில் பல துறையினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் சம்யுக்தா ஹெட்டேவும் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, இவரது பெற்றோர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மீண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்யுக்தா ஹெக்டே மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com