’எங்கூட நடிச்சா டாப் ஹீரோயின்தான்’: இது ஜெயம் ரவி சென்டிமென்ட்!

’எங்கூட நடிச்சா டாப் ஹீரோயின்தான்’: இது ஜெயம் ரவி சென்டிமென்ட்!

’எங்கூட நடிச்சா டாப் ஹீரோயின்தான்’: இது ஜெயம் ரவி சென்டிமென்ட்!
Published on

திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க, விஜய் இயக்கியிருக்கும் படம் 'வனமகன்'. அடர்ந்த வனப்பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, சாயீஷா ஜோடியாக நடித்துள்ளனர்.

வரும் 23-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படம் பற்றி நடிகர் ஜெயம் ரவி கூறும்போது, ’கதை மேல் நம்பிக்கை வைத்து படத்துக்கு எல்லோரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். என்னுடன் நடித்தால் பெரிய ஹீரோயின் ஆகிவிடுவதாகச் சொல்வார்கள். இதில் சாயிஷா என்னுடன் நடித்திருக்கிறார். நிச்சயம் அவர் பெரிய ஹீரோயின் ஆகிவிடுவார். விஜய் மாதிரி சினிமாவை நேசிக்கும் ஒருவரால் தான் இந்த படத்தை எடுக்க முடியும். இந்த படம் ஒரு நல்ல விஷயத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது. கூட்டுக் குடும்பமாக வாழும் மலை சார்ந்த மக்களை பற்றிய படம் தான் இது. கடுமையாக உழைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். தமிழனாக இருந்தால் படத்தை நெட்டுல போடாதீங்க. போட்ட பணத்தை நிச்சயம் இந்த படம் திரும்ப எடுக்கும். அப்படி ஒடலைனா, சம்பளம் வாங்காமல் விஜய்க்கு ஒரு படம் பண்ணி கொடுக்கிறேன்’ என்றார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com