”காந்தி மற்றும் அம்பேத்கர் இடையிலான விவாதம் சுவாரஸ்யமாக இருக்கும்” - நடிகை ஜான்வி கபூர்

நேர்காணல் ஒன்றில் மறைந்த தலைவர்கள் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் குறித்து நடிகை ஜான்வி கபூர் பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்ட்விட்டர்
Published on

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர். இவர், தற்போது ’மிஸ் அண்ட் மிஸஸ் மஹி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 31ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஜான்வி கபூர் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், ஊடகம் ஒன்றில் காந்தி, அம்பேத்கர் மற்றும் சாதி பாகுபாடு பற்றி அவர் பேசிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ”அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே நடக்கும் விவாதத்தைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இருவரும் இந்தியச் சமூகத்தை வடிவமைத்ததில் முக்கியப் பங்கு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சமூக மாற்றத்தில் எதற்காக நிற்கிறார்கள், ஒரு குறிப்பிட்ட தலைப்பில் அவர்களின் பார்வைகள், எண்ணங்கள் காலப்போக்கில் எவ்வாறு மாற்றம் அடைந்தது என்பது பற்றிய விவாதம் சுவாரஸ்யமானதாக இருக்கும்.

இதையும் படிக்க:’’நாங்க MI அல்ல.. ருதுராஜை கேப்டனாக்கியது தோனிதான்” - மும்பை அணியை விமர்சித்த CSK CEO!

ஜான்வி கபூர்
தோனிக்கு 7னா எனக்கு 6|புதுப்பட புரமோஷனில் ஈடுபடும் ஜான்வி கபூர்! #Viralphotos

அம்பேத்கர் ஆரம்பத்திலிருந்தே தனது நிலைப்பாடு என்ன என்பதை மிகக் கடுமையாகவும் தெளிவாகவும் தெரிவித்தார். நம் சமூகத்தில் பரவி வரும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை அவர் மேலும்மேலும் வெளிப்படுத்தியதால், காந்தியின் பார்வை மாறிக்கொண்டே வந்தது என நினைக்கிறேன்.

மூன்றாம் நபரின் கண்ணோட்டத்தில் இருந்து இதைப் பற்றி மேலும் அறிந்துகொள்வது மற்றும் சகித்துக்கொள்வது என்பது மிகவும் வித்தியாசப்படும்” எனத் தெரிவித்திருக்கும் கருத்து இணையத்தில் வருவதுடன், பலரும் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: ”சிறந்த வீரராக இருக்கலாம்; ஆனால்” - சாடிய தோனி.. நீக்கப்பட்ட அந்த வீரர்.. தேடிய CSK ரசிகர்கள்!

ஜான்வி கபூர்
கமலின் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்?- வெளியான தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com