அமிதாப் பச்சன், தர்மேந்திரா, சஞ்சீவ்குமார், ஹேமமாலினி, ஜெயா பாதுரி உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான இந்தி படம், ஷோலே.
இந்தியாவின் டாப் 10 படங்களில் ஒன்றான இதை ரமேஷ் சிப்பி இயக்கி இருந்தார். இந்தப் படம், 1975-ம் ஆண்டு வெளியானது. படம் தொடங்கி சில வருடங்கள் கழித்தே படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இந்த தாமதத்துக்கு இயக்குனரின் பர்பெக்ஷன்தான் காரணம் என அமிதாப் பச்சன் கூறியுள்ளார். அவர் கூறும்போது, ‘நினைத்தது வரவில்லை என்றால் விடமாட்டார் இயக்குனர் ரமேஷ் சிப்பி. ஷோலே படத்தில் ஒரு காட்சி, நான் மவுத் ஆர்கன் வாசித்துக்கொண்டிருக்கும்போது வீட்டில் ஜெயா விளக்கு ஏற்றவேண்டும். இந்தக் காட்சிக்கு ஒருவிதமான லைட்டிங் தேவைப்பட்டது. சூரிய அஸ்தமனத்தில் அந்தக் காட்சியை எடுக்க நினைத்தார் ரமேஷ் சிப்பி. நீங்கள் நம்ப மாட்டீர்கள். இந்தக் காட்சியை எடுக்க மூன்று வருடங்கள் ஆனது. பிறகுதான் அந்தக் காட்சி ஓகே ஆனது’ என்று தெரிவித்துள்ளார் அமிதாப் பச்சன்.