TN 07 CM 2026... விஜய்காந்தாக தோன்றி விஜய்யாக... G.O.A.T படத்தில் அரசியல் பேசியுள்ளாரா விஜய்?

தி கோட் படத்தில் விஜய்காந்த் மற்றும் எம்.ஜி.ஆரை வைத்து விஜய் அரசியல் பேசியுள்ளாரா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்துள்ளது.
தி கோட்
தி கோட்முகநூல்
Published on

தி கோட் படத்தில் விஜய்காந்த் மற்றும் எம்.ஜி.ஆரை வைத்து விஜய் அரசியல் பேசியுள்ளாரா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்துள்ளது.

விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு வெளியான முதல் திரைப்படம் The Greatest of all time. அதனால் தான், இந்தப் படம் எப்படி இருக்கும் என்பதை தாண்டி, அரசியல் குறியீடுகள் ஏதேனும் படத்தில் இருக்க்கிறதா என விமர்சகர்கள் மட்டுமில்லாமல், ரசிகர்களும் தேடி பார்க்கின்றனர்.

அந்த வகையில், படத்தின் முதல் காட்சியில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கேப்டன் விஜய்காந்த் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. எப்படி என்றால், இதன் மூலமாக விஜய்காந்த் ரசிகர்களையும், தேமுதிக தொண்டர்களையும் தன் பக்கம் இழுக்கப் பார்க்கிறாரா விஜய்? என சமூக வலைதளங்களில் பலரும் பேசுவதை பார்க்க முடிகிறது.

அதே போல் படத்தில் விஜய் வைத்துள்ள காரில் TN 07 CM 2026 என்ற எண் இடம்பெற்றுள்ளது. அதில் TN 07 என்பது, அவரது வீடு இருக்கும் நீலங்கரையின் பதிவு எண் என்றும், எம்.ஜி.ஆருக்கு பிடித்தமான எண் ஏழு என்பதால், அதை விஜய் பயன்படுத்தியுள்ளார் என்றும் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

இதன் மூலம் எம்.ஜி.ஆர் வழியில் விஜய் பயணிக்க போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே போல், விஜய் தேர்தலில் கூட்டணி அமைத்து பேட்டியிடுவார் என ஊகங்கள் பரவி வரும் நிலையில், CM 2026 என்ற குறியீட்டின் மூலம், தன்னை தான் 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் என்று விஜய் குறிப்பிடுகிறாரா என்றும் பேசப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், கோட் படத்தின் படப்பிடிப்பின்போது தான் விஜய் அரசியலுக்கு வருவதை அறிவித்தார் என்றும், அதனால் தான் படத்தில் அங்காங்கே அரசியல் தொடர்பான மேற்கோள்களை வைத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார். படப்பிடிப்பு நடக்கும் போது கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியானதால் தான், பார்டி ஒன்னு தொடங்கட்டுமா என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். படம் வெளியான முதல் நாள் வரைக்கும் பேசப்பட்ட அரசியல், அரசியல் குறியீடுகள் குறித்து இதுவரை பார்த்திருக்கிறோம்.

தி கோட்
GOAT MOVIE REVIEW | விஜய் VS விஜய்... எப்படியிருக்கிறது GOAT..?

இன்னும் ஒன்று, இரண்டு நாட்கள் போன பிறகு தான், வெங்கட் பிரபுவுக்கும், விஜய்க்கும் தெரியாத அரசியல் குறியீடுகளை ரசிகர்கள் கண்டுபிடித்து கூறுவார்கள். இது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது என்பதில் ஆச்சரியமில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com