ரன்பீர் கபூர் - ஆலியா பட் நடிப்பில் வெளியாகியிருந்த பிரம்மாஸ்திரா பார்ட் ஒன் - ஷிவா பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனிலும் சரி, விமர்சன ரீதியிலும் சரி பெரிதளவில் வரவேற்பு கிட்டாமல்தான் இருந்திருக்கிறது. இருப்பினும், VFX, Special Effects, கிராஃபிக்ஸ் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் மட்டும் சிறப்பாக இருந்ததாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேவேளையில், 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டிருந்தாலும், கதையின் நாயகியான ஆலியா பட்டின் காஸ்டியூமில் ஏன் படக்குழு கவனம் செலுத்தவில்லை என்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். ஏனெனில் படம் முழுக்க ஆலியாவிற்கு ஸ்கின்னி ஜீன், டி-ஷர்ட், ஷ்ரக்தான் காஸ்டியூமாக இருக்கும்.
‘சப் சப் கே’ படத்தில் வரும் ராஜ்பால் யாதவ்வின் பண்ட்யா கேரக்டர் அணிந்திருந்த V Neck டிஷர்ட் போன்றே பிரம்மாஸ்திராவில் ஆலியா அணிந்திருக்கிறார் என போஸ்ட்களை நெட்டிசன்கள் அள்ளி வீசியிருக்கிறார்கள்.
அதன்படி, “பிரம்மாஸ்திராவில் பாண்ட்யாவின் ஸ்டைலை ஆலியாவின் கேரக்டருக்கான காஸ்டியூமாக திருடியதை நம்பவே முடியவில்லை” என ட்விட்டர் பயனர் ஒருவர் ட்வீட்டியிருக்கிறார். அந்த பதிவில், பாண்ட்யா கேரக்டரில் வந்த ராஜ்பால் யாதவும் லைட் பிங்க் கலரின் v neck ஸ்டைலில் அணிந்திருந்த அதே மாதிரியான டிசைனில்தான் பிரம்மாஸ்திராவில் ஆலியா போட்டிருந்த டி-ஷர்ட்டையும் ஒப்பிடப்பட்டிருக்கிறது. இந்த போஸ்ட் ஷேர் ஆனதிலிருந்து கிட்டத்தட்ட ஆறாயிரத்துக்கும் மேலானோர் லைக் போட்டதோடு, நூற்றுக்கணக்கான ரீட்வீட்களையும் பெற்றிருக்கிறது.
இதனைக் கண்ட நெட்டிசன்கள், “படத்துக்கான மொத்த பட்ஜெட்டையும் கிராஃபிக்ஸ் பணிக்கே படக்குழு செலவிட்டதால் காஸ்டியூம் வாங்கவும், வசனகர்த்தா, கதாசிரியருக்கு செலவழிக்க காசில்லாமல் போயிருக்கும்” என ட்வீட் போட்டிருக்கிறார்கள். அதேபோல, “ஆலியாவின் காஸ்டியூமைவிட பாண்ட்யாவின் காஸ்டியூமே நல்லா இருக்கு” என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.