மகிழ் திருமேனி - அஜித் கூட்டணியில உருவாகிட்டு வர்ற விடாமுயற்சி படத்தோட first shedule ஷூட்டிங் முடிஞ்ச நிலையில, ஓரிரு நாட்கள்ல இரண்டாம் கட்ட ஷூட்டிங்கும் தொடங்க இருக்குது. இந்த நிலையிலதான், ஜெனரல் செக்கப் செய்யலாம்னு நடிகர் அஜித் சென்னையில இருக்க அப்போலோ hospital-க்கு நேற்றைய தினம் போயிருக்காரு. இந்த செய்தி வெளியான உடனே, ‘அஜித்துக்கு என்ன ஆச்சு’ அப்டின்ற கேள்வியோட பல தகவல்கள் பரவிட்டு வந்தது. அதோட உச்சகட்டமா, நடிகர் அஜித்துக்கு மூளையில சிறிய கட்டி இருந்ததாவும், சின்ன அப்ரேஷன் மூலமா மருத்துவர்கள் அந்த கட்டிய அகற்றியதாகவும் தகவல் பரவிச்சு. இந்த நிலையிலதான், அஜித்தோட மேலாளர் சுரேஷ் சந்திரா தரப்புல இருந்து விளக்கம் அளிக்குற விதமா ஒரு தகவல் சொல்லப்பட்டிருக்கு.
அது என்னென்னா? “நடிகர் அஜித்துக்கு மூளையில கட்டி எல்லாம் எதுவும் இல்ல. ஆப்ரேஷனும் பண்ணல. விடாமுயற்சி படத்தோட ஆர்ட் டைரக்டர் மிலன், அஜித்தோட நெருங்கிய நண்பர் வெற்றி துரைசாமி மரணத்துக்கு அப்புறம் மனசலவுல சோர்ந்து இருந்த அவர் நார்மல் செக்-அப்புக்குதான் அப்போலோ போனார். போன இடத்துலல் ஏதேதோ ஸ்கேன் உள்ளிட்ட சகல டெஸ்டுகளும் எடுத்த பிறகு, காதுக்கு கீழே உள்பகுதியில பல்ஜ்-னு சொல்லக்கூடிய சின்ன புடைப்பு இருந்தத பார்த்த டாக்டர்ஸ், அஜித்தோட அனுமதியோட அரைமணி நேரத்துல அறுவை சிகிச்சை மூலமா அகற்றிட்டாங்க.
இத தொடர்ந்து நேற்றைய தினமே, ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்டுட்டாரு. அதேமாதிரி இன்றைய தினமே டிஸ்சார்ஜ் ஆகிடுவாரு. இந்த மைனர் ஆபரேஷனால அவரோட நடவடிக்கையில எந்த பாதிப்பும் ஏற்படாது. திட்டமிட்டப்படியே, அடுத்த வாரம் அஜர்பைஜானில நடக்குற விடாமுயற்சி ஷூட்டிங்கிறகும் கிளம்பிடுவாரு. 3 மாத ஓய்வுன்னு பரவுறதெல்லாம் பொய்யான தகவல்” அப்டின்னு சொல்லப்பட்டிருக்கு. ஷூட்டிங் தொடங்கின உடனே அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரும்னும் எதிர்பார்க்கப்படுது.
இது சம்மந்தமா அஜித் தரப்ப தொடர்புகொண்டு பேசினப்போ, ”பொதுவாக 50 வயசுக்கு மேல ஆனாலே, ஜெனரல் செக்கப் பண்றது நல்லதுன்னு தன்னோட நலம் விரும்பிகளுக்கு அறிவுறுத்தக்கூடிய நடிகர் அஜித், நாம first செக்கப் பண்ணாதான், முன்னுதாரணமா இருக்கும்னு ஜெனரல் செக்கப் பண்ணிருக்காரு. அவரு மத்தவங்களுக்கு மட்டும் சொல்ல மாட்டாரு. செஞ்சி காட்டக்கூடியவரு.. அவரு இப்போ நலமாகத்தான் இருக்காரு” அப்டின்னு உறுதிபடுத்தியிருக்காங்க