நடிகர் இர்பான் கான் சிகிச்சை: உண்மை நிலை என்ன?

நடிகர் இர்பான் கான் சிகிச்சை: உண்மை நிலை என்ன?
நடிகர் இர்பான் கான் சிகிச்சை: உண்மை நிலை என்ன?
Published on

நடிகர் இர்பான் கான் உடல் நிலை பற்றி வதந்தி பரப்ப வேண்டாம் என்று அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் இர்பான் கான். இவர், 'ஜுராசிக் வேர்ல்ட்', 'தி ஜங்கிள் புக்', ‘தி அமேஸிங் ஸ்பைடர்மேன்’, 'லைஃப் ஆஃப் பை', ’ஸ்லம்டாக் மில்லியனர்’ ஆகிய ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு சமீபத்தில் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு நியூரோ எண்டாக்ரின் டியூமர் (neuroendocrine tumour) எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இர்பான் கான் இதற்காக லண்டனில் சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில், அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதாகவும் அவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாயின. 

இதை மறுத்துள்ள அவரது செய்தி தொடர்பாளர், ’இர்பான் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக வரும் செய்திகளில் உண்மையில்லை. அவர் உடல் நலம் குணமாக பிரார்த்தனை செய்யுங்கள். தேவையில் லாமல் வதந்திகளை பரப்பாதீர்கள்’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com