பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

'இரண்டாம் குத்து' படத்தின் விநியோக உரிமைக்கான நிலுவைத் தொகை 1.84 கோடி ரூபாயை வழங்கும் வரை பிசாசு 2 படத்தை வெளியிட தடைக்கோரி ஃப்ளையிங் ஹார்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட்ட இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், வழக்கு தொடர்பாக பதிலளிக்க ராக்ஃபோர்ட் என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com