“2014-க்கு முன்புவரை இதுதான் நடந்தது!” - அமரன் படத்துக்கு ஆதரவாக குதித்த இந்து மக்கள் கட்சியினர்!

கோவையில் அமரன் படத்தை ஆதரிக்கும் வகையில் இந்து மக்கள் கட்சியினர் அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் திரையரங்கில் படத்தை கண்டு களித்தனர்.
அமரன் திரைப்படம்
அமரன் திரைப்படம்web
Published on

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இருவரின் அசாத்தலான நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘அமரன்’.

2014-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள 44-வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பட்டாலியனில் பணிபுரியும் போது, ஷோபியானில் நடந்த காசிபத்ரி ஆபரேஷனில் முக்கியப் பங்கு வகித்து உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் இயக்கப்பட்டுள்ளது.

அமரன்
அமரன்pt web

இந்திய ராணுவ வீரர்களின் தீரம்மிக்க வீரச்செயல்களை அடிப்படையாகக் கொண்டு காஷ்மீரின் சவால் மிக்க நிலப்பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் அமரன் திரைப்படம், முடிந்தளவு உண்மை காட்சிகளை படமாக்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டுள்ளது.

ஆனால் காஷ்மீரில் நிலவும் அரசியல் என்ன என்பது குறித்தும், அங்கிருக்கும் மக்களின் வாழ்க்கை சூழல் எப்படி இருக்கிறது என்பது குறித்தும் அமரன் பேசவில்லை என பல்வேறு விமர்சனங்களும், அங்கிருக்கும் ஒரு சமூக மக்களை தவறாக சித்தரிப்பதாகவும் கூறி படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடந்துவருகின்றன.

இந்நிலையில் படத்திற்கு எதிர்ப்பை தெரிவிப்பவர்களை விமர்சித்து அமரன் படத்திற்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியினர் இறங்கியுள்ளனர்.

அமரன் திரைப்படம்
”ஆயிரக்கணக்கான அபலைப் பெண்களை களங்கப்படுத்தும் அமரன்..” - மிக கடுமையாக விமர்சித்த ஜவாஹிருல்லா!

“இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக காட்டவில்லை..”

அமரன் திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திரையரங்கிற்கு இந்து மக்கள் கட்சியினர் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் இந்த படத்தை காண்பதற்கு வருகை தந்தனர்.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தை காண வந்த ஒரு சில பொதுமக்களுக்கு டிக்கெட்டுகளை இலவசமாக வாங்கி கொடுத்தும் ஆதரவளித்தனர்.

தொடர்ந்து திரையரங்கு முன்பு கூடிய அர்ஜுன் சம்பத் உட்பட 20க்கும் மேற்பட்டோர், அமரன் திரைப்படத்திற்கு ஆதரவாகவும் எஸ்டிபிஐ, மே 17 இயக்கத்தை தடை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

இந்து மக்கள் கட்சி
இந்து மக்கள் கட்சி

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், “அமரன் படத்தின் மூலம் ராணுவ வீரர்கள் மீதுள்ள மரியாதை மிகவும் உயர்ந்துள்ளது. ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் ராணுவ வாழ்க்கை, வீரம், காதல் ஆகியவை அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கிறது.

அதே சமயம் காஷ்மீர் மக்களின் வலிகளை இப்படம் பேசவில்லை என்று கூறி எஸ் டி பி ஐ கட்சி, மே 17 இயக்கம் ஆகியவை கடந்த சில தினங்களாக திரையரங்குகள் முன்பு ஆர்ப்பாட்டம் என்கின்ற பெயரில் உருவ பொம்மை எரிப்பு தள்ளுமுள்ளு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்த திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால். இந்த படத்திற்கு செல்லலாம் என்று நினைக்கின்ற மக்கள் அங்கு சென்றால் ஏதேனும் நிகழ்ந்துவிடுமோ என்ற சூழலை ஏற்படுத்தி இருகிறார்கள்” என்று சாடினார்.

amaran
amaran

மேலும், “இந்த படத்தில் ஆர்.எஸ்.எஸ் முழக்கங்கள் எழுப்பப்படுவதாக எஸ்டிபிஐ கட்சியினர், மே 17 இயக்கத்தினர் கூறுகின்றனர். ஆனால் இந்திய ராணுவத்தில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு முழக்கங்கள் உள்ளன. அனைத்து இஸ்லாமியர்களும் தேசவிரோதிகள் அல்ல; பாகிஸ்தானால் தூண்டப்பட்டவர்கள் என்பதையெல்லாம் இந்த படத்தில் அருமையாக காட்சிப்படுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

அமரன் திரைப்படம்
”காஷ்மீரின் அரசியலும் சூழலும் பேசப்படவில்லை..”- அமரன் குறித்து இயக்குநர் வசந்தபாலன் வைத்த விமர்சனம்!

2014-க்கு முன்புவரை இதுதான் நடந்தது..

தொடர்ந்து பேசிய அவர், “இப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள காட்சிகளைப் போல்தான் 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்தது. மோடி பிரதமர் பதவிக்கு வருவதற்கு முன்பாக நம்முடைய இந்திய ராணுவ வீரர்கள் மீது கல் எரியும் சம்பவங்களும், குழந்தைகளை அழைத்து சென்று மூளை சலவை செய்கின்ற செயலை பிரிவினைவாதிகள் தொடர்ந்து செய்து கொண்டே இருந்த சம்பங்களும் நடந்தன. இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக காட்டுவது இந்த படத்தின் நோக்கம் அல்ல, இந்திய ராணுவத்தில் நம்முடைய ராணுவ வீரர்கள் எந்த அளவிற்கு உயிரை பணயம் வைத்து பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த படம் காட்டியிருக்கிறது” என தெரிவித்தார்.

amaran
amaran

SDPI, மே 17 இயக்கம் ஆகிய இரண்டு அமைப்புகளும் தடை செய்யப்பட வேண்டிய அமைப்புகள், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கின்ற வகையில் பல்வேறு போராட்டங்களில் அவர்கள் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும் “அமரன் படத்திற்கு மத்திய மாநில அரசுகள் கேளிக்கை வரியில் இருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும், இந்த படத்தை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவர்களுக்கு இலவசமாக திரையிட்டு காட்ட வேண்டும், அரசு ஊழியர்கள் காவல்துறையினருக்கு இலவசமாக திரையிட்டு காட்ட வேண்டும்” என்ற கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

அமரன் திரைப்படம்
”ஒரு சமூகத்தின் துயரத்தை யாரும் கவனிக்கவில்லை” - ‘அமரன்’ குறித்து கோபி நயினார் காட்டமான விமர்சனம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com