இந்தியன் 2 விபத்து: கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு

இந்தியன் 2 விபத்து: கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு
இந்தியன் 2 விபத்து: கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு
Published on
இந்தியன் 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த உதவி இயக்குநர் கிருஷ்ணா, பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் என்பது தெரியவந்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்தப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 7‌ஆம் தேதி முதல் செம்பரம்பாக்கத்தில் உள்ள பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இ‌ரவு பகலாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்றிரவு 9 மணிக்கு படப்பிடிப்பு தளத்தில், ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த கிரேன் ஒன்று அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது கிரேனுக்கு அடியில் சிக்கிய உதவி இயக்குநர் கிருஷ்ணா,‌ தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 9 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த உதவி இயக்குநர் கிருஷ்ணா, பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் என்பது தெரியவந்துள்ளது. மதனின் இளைய மகள் அமிதாவும், உதவி இயக்குநர் கிருஷ்ணாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவரும் இணைந்து பல விளம்பரங்கள் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான விளம்பர படங்களை இயக்கியுள்ளனர்.
இதற்கிடையே இந்தியன் 2 விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com