மறு தணிக்கை செய்ய கோரிக்கை - 2.0 ரிலீஸில் சிக்கல்?

மறு தணிக்கை செய்ய கோரிக்கை - 2.0 ரிலீஸில் சிக்கல்?
மறு தணிக்கை செய்ய கோரிக்கை - 2.0 ரிலீஸில் சிக்கல்?
Published on

செல்போன்கள் குறித்து ஆதாரமின்றி தவறுதலாக சித்தரித்திருப்பதாக ‘2.0’ படத்தின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

பெரிய எதிர்பார்ப்போடு நாளை மறுநாள் வெளியாக உள்ளது ‘2.0’. ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ வெற்றியை தொடர்ந்து மிக பிரம்மாண்டாக தயாராகியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏறகுறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் படத்தின் வருகைக்காக ரஜினியின் ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

ஏன்? இந்திய சினிமா உலகமே ‘2.0’வின் வருகையை எதிர்பார்த்தே உள்ளது எனலாம். ஏனெனில் இந்தியா போன்ற ஒரு நாட்டில் இவ்வளவு பொருட்செலவுடன் தயாராகும் படத்தின் வசூல் என்பது வெளியாகும் குறிப்பிட்ட படத்துடன் முடிந்து போகப்போவதில்லை. அதன் வியாபாரம் இந்திய சினிமா மார்கெட்டை பற்றிய ஒரு புரிதலை உருவாக்க உதவக்கூடும். இந்தப் படம் இந்திய மதிப்பில் 500 கோடி பட்ஜெட் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 6600ல் இருந்து 6800 வரையான திரைகளில் இப்படம் திரையிடப்பட உள்ளது. படத்தின் டிக்கெட் புக்கிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் படத்தில் செல்போன்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்திய செல்போன் ஆப்ரேட்டர்கள் சங்கத்தினர், மத்திய தணிக்கைத் துறை, தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகத்திற்கு இன்று அளித்த மனுவில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அந்த மனுவில், எந்திரன் ‘2.0’ படத்தில் எந்தவித ஆதாரமும் இன்றி செல்போன்களை தவறாக சித்தரித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். படத்தின் டீஸர், டிரெய்லர் மற்றும் விளம்பர வீடியோக்களில் காண்பிப்பாது போல, செல்போன்களை கட்டுப்படுத்துவதற்கு எந்தவித தொழில்நுட்பங்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே இந்தப் படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com