விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்குவது என்பதில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
‘விஜய்62’ படப்பிடிப்பு திரைத்துறை வேலை நிறுத்தத்தை மீறி மிக சிறப்பாக நடைப்பெற்று வந்தது. இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என முன்கூட்டியே தேதி அறிவித்துவிட்டதால் அதற்குத்தக்க வேலைகள் வேகம் எடுத்து வருகின்றன. இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பதில் பல குழப்பங்கள் நிலவி வருகின்றன. முதலில் ‘சதுரங்கவேட்டை’ வினோத், நடிகர் விஜய்யை சந்தித்து கதை சொல்லியிருப்பதாகவும் அந்தக் கதை விஜய் விரும்பக்கூடியதாக இருந்ததாகவும், ஆகவே அவரது இயக்கத்தில் அடுத்த நடிக்க இருப்பதாகவும் செய்தி வெளியானது. அதற்குள் இப்போது வேறு ஒரு புதிய இயக்குநரின் பெயர் அடிபட ஆரம்பித்துள்ளது. அதாவது ‘வடசென்னை’க்கு பிறகு வெற்றிமாறன் விஜய்யை இயக்கப் போவதாக தகவல் கசிந்து வருகிறது.
எப்போதும் கமர்ஷியல் பேக்கேஜ் இயக்குநர்கள் கூடவே கூட்டணி அமைக்கும் விஜய் இந்த முறை கதையம்சத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வெற்றிமாறனை தேர்ந்தெடுக்க இருப்பதாக தெரிகிறது. அவ்வாறு இந்தக் கூட்டணி அமைந்தால் விஜய்யை ஒரு புதிய தோற்றத்தில் காணலாம். ஆகவே அவரது ரசிகர்கள் மத்தியில் இச்செய்தி இனிப்பாக தித்திக்க தொடங்கியுள்ளது.