சினிமா ஊழியர்களுக்காக வருகிறது ‘பாதுகாப்பு குழு‘?

சினிமா ஊழியர்களுக்காக வருகிறது ‘பாதுகாப்பு குழு‘?
சினிமா ஊழியர்களுக்காக வருகிறது ‘பாதுகாப்பு குழு‘?
Published on

சினிமா ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் 'பாதுகாப்பு குழு' ஒன்றை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 10 பேர் காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து படப்பிடிப்பு தளங்களில் உள்ள பாதுகாப்பு விவாதப் பொருளாக மாறியது. தயாரிப்பு நிறுவனங்கள், திரைப்பட பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையையும் பலர் முன் வைத்தனர்.

இதனையடுத்து இது குறித்த ஆலோசனைக் கூட்டம் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் சினிமா ஊழியர்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு குழு ஒன்றை அமைக்கவும், திரைத்துறை சங்கங்கள் அனைத்தும் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com