காதலருடன் மோதல்: இன்ஸ்டா புகைப்படங்களை அவசரமாக நீக்கிய இலியானா!

காதலருடன் மோதல்: இன்ஸ்டா புகைப்படங்களை அவசரமாக நீக்கிய இலியானா!
காதலருடன் மோதல்: இன்ஸ்டா புகைப்படங்களை அவசரமாக நீக்கிய இலியானா!
Published on

தனது காதலருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, இன்ஸ்டாகிராமில் அவருடன் இருந்த புகைப்படங்களை அவசரமாக நீக்கியுள்ளார் நடிகை இலியானா.

தமிழில், கேடி, விஜய்யின் ’நண்பன்’ படங்களில் ஹீரோயினாக நடித்தவர் இலியானா. தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ள அவர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை காதலித்து வந்தார். தனது காதல் பற்றி வெளிப்படையாக இலியானா கூறவில்லை என்றாலும் இருவரும் ஒன்றாகச் சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாயின.

பின்னர் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களும் பரபரப்பாகப் பேசப்பட்டன. இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாயின. ஆனால், இதை இருவரும் உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் நடிகை இலியானாவுக்கும் ஆண்ட்ருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின் தொடர்வதை நிறுத்திவிட்டனர்.


கடந்த ஜூலை 31 ஆம் தேதி ஆண்ட்ரு தனது 31 வது பிறந்த தினத்தைக் கொண்டாடியபோது, அவருக்கு காதல் மெசேஜ் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார், இலியானா. இப்போது அதை நீக்கியுள்ள இலியானா, ஆண்ட்ருவின் புகைப்படங்களையும் நீக்கிவிட்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com