குஷ்பு தமிழ் கற்றது எப்படி? எஸ்.பி. முத்துராமன் பேச்சு

குஷ்பு தமிழ் கற்றது எப்படி? எஸ்.பி. முத்துராமன் பேச்சு
குஷ்பு தமிழ் கற்றது எப்படி? எஸ்.பி. முத்துராமன் பேச்சு
Published on

கலையால் மட்டுமே ஒற்றுமையை உருவாக்க முடியும் என்று இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூறினார்.

ஐதராபாத்தில் நடக்கும் ஐஃபா விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருது திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு வழங்கப்பட்டது. விருதை நடிகர் சங்கத் தலைவர் நாசர், பிலிம்சேம்பர் செயலாளர் ரவி கொட்டாரக்கரா, நடிகை குஷ்பு ஆகியோர் வழங்கினர். பின்னர் எஸ்.பி.முத்துராமன் பேசும்போது, ‘இங்கு பேசிய நாசர் எனக்கு 81 வயது என்று சொன்னார். நான் பிறந்த தேதி படி என் வயது அப்படியாக இருக்கலாம். ஆனால் என்மனதின் படி 31வயதுதான்.

உங்களைப் பார்த்த பிறகு என் வயது 18 ஆகிவிட்டது. தொடர்ந்து வேலை செய்துகொண்டிருந்தால், வயது ஆகாது. இங்கே பேசிய குஷ்பு, நான் அவருக்குத் தமிழைக் கற்றுக்கொடுத்ததாகச் சொன்னார். அவர் தமிழ் சினிமாவுக்கு வரும்போது ஒரு வார்த்தை கூட தமிழ் தெரியாது. ஆங்கிலத்தில், இந்தியில் எழுதி வைத்து கொண்டு சொல்லிக் கொடுத்தோம். இப்போது கலைஞரை மேடையில் வைத்துக்கொண்டே அவர் சிறப்பாகப் பேசுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல தர்மத்தின் தலைவன் படத்தில் நாசரை வில்லனாக அறிமுகப்படுத்தினேன். ஒரு காட்சியில் அவர் முகத்தில் நடிகர் பிரபு குத்த வேண்டும். நாசர் முகத்தைத் திருப்ப வேண்டும். ஆனால் டைமிங் மிஸ்சாகி, அவர் மூக்கில் இருந்து ரெத்தம் கொட்டியது. அந்த நாசர் இன்று சிறந்த நடிகராக பல மொழிகளில் நடித்து கொண்டிருக்கிறார்.

மனிதர்களாக வாழ்வது தான் வாழ்க்கை. லட்சியத்தோடு வாழ்ந்தால் வெற்றி பெறலாம். கலையால் மட்டுமே ஒற்றுமையை உருவாக்க முடியும்’ என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com