மீரா கதிரவன் இயக்கியுள்ள படம், 'விழித்திரு'. வெங்கட்பிரபு, கிருஷ்னா, தன்ஷிகா, விதார்த், இந்தி நடிகை எரிக்கா பெர்ணான்டஸ், புதுமுகம் ராகுல் பாஸ்கரன் உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் இந்தப் படம் அந்தாலஜி வகையை சேர்ந்தது.
படம் பற்றி, ராகுல் பாஸ்கரன் கூறும்போது, ’நான் மதுரையை சேர்ந்தவன். அப்பா மத்திய அரசு ஊழியராக வேலை பார்த்ததால், இந்தியா முழுவதும் வசித்திருக்கிறோம் படத்தில் எரிக்கா ஜோடியாக நடித்துள்ளேன். கோடிஸ்வரரின் மகன் கேரக்டர். பல கதைகள் ஒன்று சேரும் இப்படத்தில் எனது கதை சிறப்பாக இருக்கிறது என படத்தை பார்த்த பலர் கூறியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் எரிக்கா, தமிழ் வசனங்கள் கற்றுகொள்ள நான் உதவி செய்தேன். சினிமாவில் எனது முன் மாதிரி விஜய் சேதுபதிதான். போராடி பெற்ற அவரது வளர்ச்சியை போல் என் வளர்ச்சியும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்’ என்றார்.