நான் எந்தப் படத்தையும் குறிப்பிட்டு பேசவில்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்

நான் எந்தப் படத்தையும் குறிப்பிட்டு பேசவில்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்
நான் எந்தப் படத்தையும் குறிப்பிட்டு பேசவில்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்
Published on

நான் எந்த திரைப்படத்தையும் குறிப்பிட்டு பேசவில்லை என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவரது நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கிய படம் கனா. இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகரகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


இந்நிலையில் அத்திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், ''ஒரு சிலர் ஓடாத படத்துக்கு எல்லாம் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். நான் இந்த படத்தை சொல்லவில்லை. கனா உண்மையான வெற்றி படம்'' என்று தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. ஐஸ்வர்யா எந்தப்படத்தையும் குறிப்பிட்டு சொல்லாத போதும் சமீபத்தில் வெளியான ஒரு பெரிய நடிகரின் திரைப்படத்தை தான் அவர் குறிப்பிட்டு பேசியதாக பலரும் கருத்து பதிவிட்டனர். 

இந்நிலையில் தான் பேசியது குறித்து ஐஸ்வர்யா விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் விளையாட்டாக கூறினேன். நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. நான் யார் மனதையும் புண்படுத்தமாட்டேன். எவ்வளவு பெரிய உழைப்புக்கு பிறகு ஒரு படம் உருவாகிறது என்று எனக்கு தெரியும். எல்லா படமும் வெற்றி பெற வேண்டுமென்பதே என் வேண்டுதலாக உள்ளது. என் பேச்சு யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com