எனக்கு ஆண் நண்பர்கள் அதிகம்: கங்கனா ரொமான்ஸ்

எனக்கு ஆண் நண்பர்கள் அதிகம்: கங்கனா ரொமான்ஸ்
எனக்கு ஆண் நண்பர்கள் அதிகம்: கங்கனா ரொமான்ஸ்
Published on

எனக்கு பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்கள்தான் அதிகம் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை கங்கனா ரனாவத்.

ஜெயம் ரவி நடித்த ‘தாம்தூம்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் கங்கனா ரனாவத். இன்றைக்கு ஹிந்தியில் பெரிய நடிகையாக வலம் வருகிறார்.‘குயின்’ படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். இந்நிலையில்,தனது தந்தை வயதுள்ள பாலிவுட் நடிகர் ஆதித்யா பஞ்சோலி தனக்கு பாலியல் தொல்லை தந்ததாக பேட்டி கொத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.  

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற ஜக்ரான் சினிமா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
நான் ஆண்களை  வெறுக்கவில்லை, உண்மையில் எனக்கு பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களே அதிகம் இருக்கிறார்கள். நான் ஒரு பெண்ணியவாதி ஆனது எனக்கே தெரியாது. ஆண்களிடம் எதிர்பார்க்கப்படும் விஷயங்களை பெண்களே செய்யும் போது சலித்து கொள்கிறார்கள். செக்ஸ் என்பது ஆணுக்கு  வேடிக்கையாக உள்ளது. அதுவே ஒரு பெண்னை  கிட்டதட்ட குற்றவாளியாக்கி விடுகிறது. கவர்ச்சி உலகின் பொதுவான கருத்து இதுதான் என்று கூறியிருக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com