“அவர் பிறந்தநாளில்தான் முதன்முதலாக சந்தித்தேன்” - இர்ஃபான் குறித்து பார்வதி உருக்கம்

“அவர் பிறந்தநாளில்தான் முதன்முதலாக சந்தித்தேன்” - இர்ஃபான் குறித்து பார்வதி உருக்கம்
“அவர் பிறந்தநாளில்தான் முதன்முதலாக சந்தித்தேன்” - இர்ஃபான் குறித்து பார்வதி உருக்கம்
Published on

இர்ஃபான் பிறந்தநாள் அன்றுதான் முதன்முதலாக அவரைச் சந்தித்தேன் என்று நடிகை பார்வதி கூறியுள்ளார்.


பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான் கடந்த 29 ஆம் தேதி காலமானார். இவர், 'ஜுராசிக் வேர்ல்ட்', 'தி ஜங்கிள் புக்', ‘தி அமேஸிங் ஸ்பைடர்மேன்’, 'லைஃப் ஆஃப் பை', ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ ஆகிய ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் நியூரோ எண்டாக்ரின் டியூமர் (neuroendocrine tumour) எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இரண்டு வருடங்களாக இவர் வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வந்தார். பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவை அடுத்து அவரது மனைவி சமீபத்தில் ஒரு உருக்கமான கடிதத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தார். 

இந்நிலையில் நடிகர் இர்ஃபான் பற்றிய தனது நினைவுகளை நடிகை பார்வதி பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் ‘தி நியூஸ் மினிட்’ தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், சில விஷயங்களைப் பேசியுள்ளார். இர்ஃபானும் இவரும் இணைந்து நடித்த ‘காரீப் கரீப் சிங்கிள்’ திரைப்படம் வெளியே வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இது நடிகை பார்வதியின் முதல் இந்தி படமாகும். பார்வதி, “ஜனவரி 7 ஆம் தேதி அவரது பிறந்தநாளில் நான் அவரை முதன்முறையாகச் சந்தித்தேன். எனது முதல் ஸ்கிரிப்ட் வாசிக்கும்போது அங்கு வந்த குழுவைச் சந்தித்தேன்.

எங்களுக்காக ஒரு கான்ஃபரன்ஸ் அறை முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் அங்கேதான் இருந்தார். அவருடைய மனைவி சுதாபாவும் அங்கே இருந்தார். எல்லோரும் இருந்தனர். நாங்கள் ஒரு முழு திரைக்கதை வாசிப்பையும் நடத்தினோம். விவரிப்பு மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற சமயங்களில் அவருக்குள்ள உள்ள உற்சாகத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டிருந்தேன். அதை அவரது வீட்டிலேயே உணர்ந்தேன். அவர் எங்களுடன் ஒரு நல்ல வகுப்புத் தோழரைப் போல இருந்தார். அன்று பிறந்தநாளுக்காக ஒரு கேக் வெட்டினோம்” என்று பல நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com