தமிழில் 180, வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, மெர்சல் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை நித்யா மேனன். இவர் கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். இவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’த அயர்ன் லேடி’யிலும் நடித்துவருகிறார்.
இந்நிலையில் இவர் குண்டாக இருப்பது பற்றி சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சித்திருந்தனர். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, 'எனது உடல் எடை பற்றி சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள். இதற்கு பதில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இதுபற்றி பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். எனது உடல் எடை பற்றி கவலைப்படுவதில்லை. அது பற்றி எனக்கே கவலை இல்லாதபோது மற்றவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? என் எடையை குறைக்க வேண்டும் என்று நான் நினைத்தால் அதற்கு ஒரு மாதம் போதும். பழைய ஹீரோயின்கள் எல்லோரும் குண்டாகத்தான் இருந்திருக்கிறார்கள்.
அதற்காக தயாரிப்பாளர்கள், படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டார்களா என்ன? நடிப்புதான் முக்கியம். உடல் எடை அல்ல. யாராவது, நான் உடல் எடையை குறைத்தால்தான் அவர்கள் படத்தில் நடிக்க முடியும் என்று விரும்பினாலும் அவர்கள் என்னில் இருந்து விலகியே இருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.