நான் தனியாக இல்லை: தன்ஷிகா தைரியம்

நான் தனியாக இல்லை: தன்ஷிகா தைரியம்
நான் தனியாக இல்லை: தன்ஷிகா தைரியம்
Published on

நான் தனியாக இல்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருக்கிறார் தன்ஷிகா.

விழித்திரு பட வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தன்ஷிகா, டி.ராஜேந்தரின் பெயரை மேடையில் குறிப்பிட மறந்து போனார். அதற்கு ஆவேசமாகி டி.ஆர் நடந்து கொண்ட விதம் குறித்து சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் இந்த விவகாரம் குறித்து தன்ஷிகா பதில் ஏதும் கூறவில்லை. அமைதியாகவே இருந்து வந்தார். அவரது தரப்பை தொடர்பு கொண்டு கேட்ட போதும் அவர் எதுவும் கூற விரும்பவில்லை என்றே பதில் வந்தது.
இந்நிலையில் தன்ஷிகா தனது ட்விட்டர் பக்கத்தில் நான் தனிமையில் இல்லை கூட நிறைய பேர் இருக்கிறார்கள். நான் நிறையப்பேரை சம்பாதித்துள்ளேன். ஒவ்வொருவரும் அனுப்பிய செய்தியை படித்தேன். மீண்டும் என் சகஜ வாழ்க்கைக்கு திரும்பி உள்ளேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த விவகாரத்தால் அவர் மன அழுத்தத்தில் இருக்கிறார் என செய்திகள் வெளியாகியிருந்த நேரத்தில் அவரது ட்விட் தன்ஷிகா ஆர்மி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com