இந்தியில் ரீமேக் ஆகும் ‘விக்ரம் வேதா’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.
தமிழில் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இந்தப்படத்தை தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரி, இந்தியிலும் உள்ளனர். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிகர் ஹிர்த்திக் ரோஷனும், மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கானும் நடிக்கின்றனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளது.
இந்தியன் எக்ஸ்ப்ரஸ் வெளியிட்ட தகவலின் படி, “ முன்னதாக விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஹிர்த்திக் ரோஷன் தன்னை தயார்ப்படுத்தி கொண்டு வந்த நிலையில்,வரும் மே மாதம் அதற்கான பிரேத்யக தயார்ப்படுத்துதலில் இறங்க உள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக இந்தப்படத்தின் வேதா கதாபாத்திரத்தில் ஷாரூக்கான், ஆமிர்கான் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்கள் விலகிவிட, தற்போது அந்தக் கதாபாத்திரத்தில் ஹிர்த்திக் ரோஷன் நடிப்பது உறுதியாகியுள்ளது.