ஹிர்த்திக் ரோஷனின் ’சூப்பர் 30’ படத்துக்கு பீகாரில் வரி விலக்கு

ஹிர்த்திக் ரோஷனின் ’சூப்பர் 30’ படத்துக்கு பீகாரில் வரி விலக்கு
ஹிர்த்திக் ரோஷனின் ’சூப்பர் 30’ படத்துக்கு பீகாரில் வரி விலக்கு
Published on

ஹிர்த்திக் ரோஷன் நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ள ’சூப்பர் 30’ என்ற இந்தி படத்துக்கு பீகார் அரசு வரி விலக்கு அளித் துள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர், ஆனந்த் குமார் (37). கணித ஆசிரியரான இவர், 2002 ஆம் ஆண்டு முதல் ’சூப்பர் 30’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம், பீகாரில் உள்ள மிகவும் ஏழை மாணவர்கள் 30 பேரைத் தேர்ந்தெடுத் து அவர்களை ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு தயார்படுத்தி வெற்றி பெற வைத்துள்ளார். அதோடு  ஒரு வருடத்துக்கான அவர்களின் செலவையும் அவரே ஏற்றுகொள்கிறார். 

பீகாரில் பிரபலமான இவரது வாழ்க்கைக் கதையை, ’சூப்பர் 30’ என்ற பெயரில் இந்தியில் படமாக்கியுள்ளனர். ஹிர்த்திக் ரோ ஷன், ஆனந்த் குமாராக நடித்துள்ளார். மிருணாள் தாக்கூர், விரேந்திர சக்சேனா, நதிஷ் சிங் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ’குயின்’ இயக்குனர் விகாஸ் பால் இயக்கியுள்ளார். இந்தப்படம் கடந்த 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகி வரவேற்பை பெற் றுள்ளது. 

இந்நிலையில், சமூகத்துக்குத் தேவையான முக்கியமான கருத்தைச் சொல்வதாலும் பீகாரை சேர்ந்த கணித ஆசிரியரை பற்றிய படம் என்பதாலும், இந்தப் படத்துக்கு அம்மாநில அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com