விலகிய ஆமிர்... களமிறங்கும் ஹிர்த்திக் ரோஷன்! - 'விக்ரம் வேதா' இந்தி ரீமேக் அப்டேட்

விலகிய ஆமிர்... களமிறங்கும் ஹிர்த்திக் ரோஷன்! - 'விக்ரம் வேதா' இந்தி ரீமேக் அப்டேட்
விலகிய ஆமிர்... களமிறங்கும் ஹிர்த்திக் ரோஷன்! - 'விக்ரம் வேதா' இந்தி ரீமேக் அப்டேட்
Published on

'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கிற்காக நடிகர் ஹிர்த்திக் ரோஷன் இரண்டு மாதங்களாக உடற்பயிற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

மாதவன், விஜய் சேதுபதி நடித்து 2017-ம் வருடம் வெளியான படம், 'விக்ரம் வேதா'. புஷ்கர்-காயத்ரி இயக்கி இருந்த இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமாக இது அமைந்திருந்தது. இதையடுத்து பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தி ரீமேக்கில் புஷ்கர்-காயத்ரியே இயக்க திட்டமிட்டு இருந்தனர். இந்தப் படத்தை படத்தைப் பார்த்த ஷாரூக்கான், இந்தி ரீமேக்கில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார்.

அவருக்கு விஜய் சேதுபதி நடித்திருந்த வில்லன் கேரக்டர் பிடித்திருந்தது. அதில் நடிக்க முடிவு செய்திருந்தார். ஆனால், படத் தயாரிப்பு நிறுவனம் அவரை மாதவன் கேரக்டரில் நடிக்குமாறு கேட்டதாம். அதோடு இந்தப் படத்தை ஷாரூக்கான் இயக்கி நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் கதையில் சில மாற்றங்கள் செய்யவும் ஆலோசிக்கப்பட்டது. இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்தப் படத்தின் ரீமேக்கில் இருந்து ஷாரூக்கான் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது.

இதன்பின், ஆமிர் கான் 'வேதா' வேடத்திலும், சயீப் அலிகான் 'விக்ரம்' வேடத்திலும் நடிக்க இருப்பதாகவும் பேசப்பட்டது. இந்த நிலையில், ஆமிர் கானும் இதில் இருந்து விலகி இருக்கிறார் என்று தற்போது கூறப்படுகிறது.

ஆமிர் கானுக்கு பதிலாக ஹிர்த்திக் ரோஷன் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக கடந்த இரண்டு மாதங்களாக, உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறார் என்று 'பிங் வில்லா' செய்தி வெளியிட்டு இருப்பதுடன், ஹிர்த்திக் நடிப்பதை உறுதியும் செய்துள்ளது.

ஹிர்த்திக்கின் நெருங்கிய வட்டாரங்களில் பேசி, இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ள பிங் வில்லா இணையதளம், ``ஹிர்த்திக் அடுத்து நடிக்கவிருப்பது விக்ரம் வேதாவின் இந்தி தழுவலாகும். இதை புஷ்கர் மற்றும் காயத்ரியே இயக்குகின்றனர். இதற்காக தனது உடல் மொழி குறித்த வேலை முதல் உயற்பயிற்சி - தோற்றம் வரை, கடந்த இரண்டு மாதங்களாக ஹிர்த்திக் உழைத்து வருகிறார்" என்று அவருக்கு நெருக்கமானவர்கள் பேசியுள்ளனர்.

இந்த கோடையில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது. தயாரிப்புக்கு முந்தைய பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இருப்பினும் இந்தி தழுவலின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com