பணத்தை தராமல் ஏமாற்றுவது எப்படி? கற்றுக்கொடுக்கும் பவர் ஸ்டார்

பணத்தை தராமல் ஏமாற்றுவது எப்படி? கற்றுக்கொடுக்கும் பவர் ஸ்டார்
பணத்தை தராமல் ஏமாற்றுவது எப்படி? கற்றுக்கொடுக்கும் பவர் ஸ்டார்
Published on

மனைவியை தொழிலதிபர் கடத்தியதாக நாடகமாடிய பவர் ஸ்டார் சீனிவாசன், கடன்பெற்ற பணத்தை திருப்பி தராமல் எப்படி ஏமாற்றுவது என தனது நண்பர்களுடன் உரையாடுவதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், வங்கிகள், பணவசதி பெற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. 

பவர் ஸ்டார் சீனிவாசன் திரைத்துறையில் இருப்பதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பலரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

கடத்தப்பட்டதாக கூறி ஊட்டியில் தங்கியிருந்தப்போது, பணம் பெற்று ஏமாற்றுவது குறித்து தனது சகாக்களுடன் அவர் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் பணத்தை பெற்று திருப்பி அளிக்காமல் எப்படி ஏமாற்றுவது என பேசி சிரிக்கின்றனர்.

முதல் ஆடியோவில் ஏமாற்றுவது எப்படி என பவர் ஸ்டார் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், "முதலில் ஒரிரு நாளில் பணத்தை தருவதாக கூறுவோம். பணம் வாங்கியப் பின்னர் பிரச்னையை கூறலாம். காவல்துறைக்கு போனால் உங்க பணம் அங்குதான் போகும்" என பவர் ஸ்டார் பேசுகிறார்.

இரண்டாவது ஆடியோவில் மற்றொரு நபர் நடிகர் என்பதால் 50% நம்புவதாகவும் மேலும் ஏமாற்றுவது நம் பெர்ஃபாமன்ஸில் உள்ளது எனவும் கூறி சிரிக்கின்றனர். 

பவர் ஸ்டார் சீனிவாசன் மீது துபாய், மலேசியா, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் பணமோசடி வழக்கு இருப்பதும், சிறை சென்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com