'ஆஸ்கர்' விருதை கூழாங்கல் வெல்லும் என்று நம்புகிறேன்: கார்த்திக் சுப்பராஜ்

'ஆஸ்கர்' விருதை கூழாங்கல் வெல்லும் என்று நம்புகிறேன்: கார்த்திக் சுப்பராஜ்
'ஆஸ்கர்' விருதை கூழாங்கல் வெல்லும் என்று நம்புகிறேன்: கார்த்திக் சுப்பராஜ்
Published on

இந்தியா சார்பில் ‘ஆஸ்கர்’ விருதுக்கு போட்டியிடும் ‘கூழாங்கல்’ படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் “விருது கிடைக்க நான் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ படத்தை தங்களது ‘ரெளடி பிக்சர்ஸ்’ சார்பாக தயாரித்துள்ளது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி. ஏற்கனவே, இப்படம், நெதர்லாந்து நாட்டில் ரோட்டர்டாம் 50 வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘டைகர்’ பிரிவுக்கு போட்டியிட்டு விருதையும் வென்ற முதல் தமிழ் படமாக சாதனையும் செய்தது. உக்ரைனில் நடந்த ‘மோலோடிஸ்ட்’ சர்வதேச திரைப்பட விழா, சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்த ‘ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா’விலும் திரையிட கூழாங்கல் தேர்வானது. இந்த நிலையில், தற்போது, சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதனால், சினிமா துறையினர் பலரும் ‘கூழாங்கல்’ திரைப்படக்குழுவிற்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கிரேட் நியூஸ். எனக்கு நம்பிக்கை இருக்கிறது ’கூழாங்கல்’ ஆஸ்கர் வெல்லும். பிரார்த்தனை செய்கிறேன்” என்று வாழ்த்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com