கலிபோர்னியா தீ விபத்து: வீடுகளை இழந்த ஹாலிவுட் பிரபலங்கள்!

கலிபோர்னியா தீ விபத்து: வீடுகளை இழந்த ஹாலிவுட் பிரபலங்கள்!
கலிபோர்னியா தீ விபத்து: வீடுகளை இழந்த ஹாலிவுட் பிரபலங்கள்!
Published on

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் ஹாலிவுட் பிரபலங்கள் சிலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளன.

அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள வனப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை திடீரென்று காட்டுத் தீ பற்றியது. இதையடுத்து அந்தப் பகுதியில் இருந்து சுமார், 2 லட்சம் பேர் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. வென்சுரா பகுதியில் வசித்து வந்த 95 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த காட்டு தீயால் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

(விக்டர் பர்க், கிம், கன்யே வெஸ்ட்)

லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மட்டும் 35 ஆயிரம் ஏக்கர் பசுமை நிலங்கள் தீக்கிரையாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை அன்று சான்டா மோனி கா மலைப் பகுதியை சூழ்ந்த காட்டுத் தீ தொடர்ந்து அங்கிருந்து பரவி மலிபு நோக்கி பரவியது. தீயை அணைக்க, தீயணைப்புப் படையி னர் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்காததால் தீ பெப்பர்டைன் பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியை நெருங்கியது.

அந்தப் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த சுமார் 7 ஆயிரத்து 700 மாணவர்கள் வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தப் பட்டனர். ஹாலிவுட் நட்சத்திரங்களான லேடி காகா மற்றும் கிம் கார்தாஷியான், கன்யே வெஸ்ட் ஆகியோரின் வீடுகள் இந்தக் காட்டுத் தீ காரண மாக சேதமடைந் தன. அவர்கள் தனியார் தீயணைப்பு வீரர்களை அமர்த்தி தங்கள் வீடுகளின் தீயை அணைத்துள்ளனர்.

இதற்கிடையே, கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க விமானங்கள் மூலம் ரசாயன பொடியை தூவும் பணிகளும் முடுக்கி விடப்பட்டன. இப்போது ஓரளவு தீ கட்டுக்குள் வந்திருக்கிறது.  

(ஜெரார்டு பட்லர்)

இதில், பல ஹாலிவுட் பிரபலங்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோ ஜெரார்டு பட்லர், தனது வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானதாக இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார். அதோடு எரிந்த வீட்டின் முன் செல்பி எடுத்து படத்தை வெளியிட்டுள்ளார். இவர் டிராக்குல்லா, ஷூட்டர்ஸ், த பாண்டம் ஆப் ஒபேரா, 300, 300 ரெய்ஸ் ஆப் அன் எம்பயர் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

(லயாம் ஹெம்ஸ்வொர்த்)
பாடகியும் நடிகையுமான மிலே சைரஸின் வீடும் சாம்பாலாகியுள்ளது. அவர், அதிர்ஷ்டவசமாக தானும் தனது செல்லப்பிராணிகளும் உயிர் தப்பியதாகத் தெரிவித்துள்ளார். இவர், பிக் பிஷ், போல்ட், த நைட் பிஃபோர் உட்பட பல படங்களில் நடித்தவர். ஆஸ்கர் விருது பெற்ற ’த ஷேப் ஆப் வாட்டர்’ படத்தின் இயக்குனரும் கதாசிரியருமான குயில்லெர்மோ டெல் டோரோ (Guillermo del Toro)வின் வீடும் தீக்கிரையாகியுள்ளது. இவர், பசிபிக் ரிம், ஹெல்பாய், கிரிம்சன் பீக், த ஷேப் வாட்டர் உட்பட பல படங்களை இயக்கியவர்.

(குயில்லெர்மோ டெல் டோரோ)

ஹோம் பாய், நார்தன் லைட்ஸ், வெல்கம் டு செப்டம்பர், 8.5 ஹவர்ஸ் மற்றும் ஃபேர் சிட்டி டிவி தொடர் மூலம் பிரபலமான விக்டர் பர்க் வீடும் நாசமாகியுள்ளது. தி எக்ஸ்பேண்டபிள்ஸ் 2, எம்பயர் ஸ்டேட், இண்டிபண்டன்ஸ் டே: ரிசர்ஜன்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ள லயாம் ஹெம்ஸ்வொர்த்தின் வீடு முற்றிலும் எரிந்துவிட்டது. 

இவர்களை போல இன்னும் பல ஹாலிவுட் பிரபலங்களின் வீடுகளும் தீ விபத்தில் சேதமடைந்துள்ளன.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com