முதல் இடத்தில் ‘பொன்னியின் செல்வன்’.. தமிழ் சினிமாவில் வசூல் வேட்டை நடத்திய டாப் 5 படங்கள்

முதல் இடத்தில் ‘பொன்னியின் செல்வன்’.. தமிழ் சினிமாவில் வசூல் வேட்டை நடத்திய டாப் 5 படங்கள்
முதல் இடத்தில் ‘பொன்னியின் செல்வன்’.. தமிழ் சினிமாவில் வசூல் வேட்டை நடத்திய டாப் 5 படங்கள்
Published on

படம் நன்றாக இருந்தாலும் ஒரு படத்தின் வெற்றி, தோல்வி என்பது அந்தப் படத்தின் வசூலைப் பொறுத்தே சில சமயங்களில் நிர்ணயிக்கப்படுகிறது. அவ்வாறு தமிழ் திரைப்படங்களில் பல திரைப்படங்கள், தமிழ்நாட்டையும் தாண்டி, தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் மற்றும் வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தியுள்ளன. எனினும் தமிழ் படங்கள், தமிழ்நாட்டில் செய்த வசூல் சாதனை குறித்து இங்கு காணலாம்.

1. பொன்னியின் செல்வன் - 1

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஷோபிதா, ஐஸ்வர்யா லக்ஷமி உள்பட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவானப் படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கியின் வரலாற்று புனைவு நாவல் திரைப்படமாக்கப்பட்ட நிலையில், இந்தப் படம் கடந்த 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படம் இதுவரை வெளியான தமிழ் படங்களில், தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் முதல் இடம் பிடித்துள்ளது. 13 நாட்களிலேயே இந்தப் படம் அந்த சாதனையை படைத்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மட்டும் 186 கோடி ரூபாய் வசூல் ஈட்டி முதல் இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் உலக அளவில் 424 கோடி ரூபாய் வசூலித்து, அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

2. விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், செம்பியன் வினோத் ஜோஸ், சூர்யா (சிறப்புத் தோற்றம்) ஆகியோரின் நடிப்பில், கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தத் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 183 கோடி ரூபாய் வசூலித்து இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேவேளையில், உலக அளவில் 446 கோடி ரூபாய் வசூலித்து, அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

3. மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், நாசர் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் தேதி வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்திருந்தது. கொரோனா காலக்கட்டத்தில் வெகு நாட்கள் கழித்து, 50 சதவிகித பார்வையாளர்களுடன் திரையரங்கில் வெளியான இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தத் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 142 கோடி ரூபாய் வசூலித்து மூன்றாம் இடத்தில் உள்ளது. அதேவேளையில், உலக அளவில் 300 கோடி ரூபாய் வசூலித்து, அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.

4. பிகில்

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், கதிர், டேனியல் பாலாஜி, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியா இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. எனினும் இரட்டை கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்ததால், இந்தத் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 140.80 கோடி ரூபாய் வசூலித்து நான்காம் இடத்தில் உள்ளது. அதேவேளையில், உலக அளவில் 298.7 கோடி ரூபாய் வசூலித்து, அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களில் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.

5. சர்கார்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில், விஜய் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘சர்கார்’. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், யோகிபாபு, பழ கருப்பையா, லிவிங்ஸ்டன் ஆகியோர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தத் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 131 கோடி ரூபாய் வசூலித்து ஐந்தாம் இடத்தில் உள்ளது. அதேவேளையில், உலக அளவில் 263 கோடி ரூபாய் வசூலித்து, அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களில் 9-வது இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும், ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான ‘2.0’ (தமிழ் + இந்தி + தெலுங்கு + சீனா) படம்தான், உலக அளவில் 800 கோடி ரூபாய் வரை வசூலித்து தமிழ் படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படங்களில் முதலிடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com