''அவர்களை ஆதரிப்பது எனது பொறுப்பு'' - அடுத்தக் களத்தில் கால்பதித்த சோனு சூட்!!

''அவர்களை ஆதரிப்பது எனது பொறுப்பு'' - அடுத்தக் களத்தில் கால்பதித்த சோனு சூட்!!
''அவர்களை ஆதரிப்பது எனது பொறுப்பு'' - அடுத்தக் களத்தில் கால்பதித்த சோனு சூட்!!
Published on

புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவ போவதாக நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் ஊரங்கு அறிவிக்கப்பட்ட நேரத்தில் பல வெளிமாநில தொழிலாளர்கள் வேலைக்குச் சென்ற இடங்களில் சிக்கிக் கொண்டனர். தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். பலர் நடந்தே மாநிலங்களைக் கடந்தனர். சிலர் செல்லும் வழியிலேயே உடல்நலமில்லாமல் இறந்தனர். சிலர் விபத்துகளில் சிக்கினர். அந்த நேரத்தில் பாலிவுட் நடிகர் சோனு சூட் தன்னுடைய சொந்த செலவில் புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் செல்ல பல உதவிகளை அளித்தார்.

பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தார். இவர் ஒடிசா, பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தார். தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களையும் அவர்
தன்னுடைய சொந்த செலவில் அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். சொந்த செலவில் பேருந்துகள் மட்டுமின்றி விமானம் மூலம்
தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பினார்.

சோனுவின் இந்தச் செயலுக்குப் பல தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இந்நிலையில் சோனு தனது உதவும் கரத்தை மேலும் நீட்டித்துக் கொண்டே இருக்கிறார். புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவ போவதாக சோனு சூட் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், ''இறந்த அல்லது காயமடைந்த புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான எதிர்காலம் கிடைக்க உதவ நான் முடிவு செய்துள்ளேன். அவர்களை ஆதரிப்பது எனது பொறுப்பு என்று நான் நினைக்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தன்னார்வலர்கள், அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், அதன் மூலம் உதவி தேவைப்படும் தொழிலாளர்களின் குடும்பங்களை கண்டறிந்து உதவி செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com