”கிரிக்கெட் மேல நீங்க வெச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா..” லப்பர்-பந்து படத்தை பாராட்டிய ஹர்பஜன் சிங்!

சமீபத்தில் கிரிக்கெட் சார்ந்த கதையம்சத்துடன் வெளியான லப்பர் பந்து படத்தை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்web
Published on

பெரிய ஆரவாரம், ப்ரமோஷன்கள் எதுவும் இன்றி கடந்த செப்டம்பர் 20-ம் தேதி வெளியான 'லப்பர் பந்து' திரைப்படமானது, ரசிகர்களின் அதிகப்படியான வரவேற்பை பெற்றது. திரையரங்கில் குறைவான ஸ்க்ரீன்களுடன் வெளியான இத்திரைப்படம், தற்போது ரசிகர்களின் பெருமித்த ஆதரவால் மெயின் ஸ்ட்ரீம் திரைப்படமாக திரையரங்கில் மாறியுள்ளது.

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் லப்பர் பந்து திரைப்படத்தில், அட்டகத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பாலசரவணன், ஜென்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

லப்பர் பந்து
லப்பர் பந்து

கிராமத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை சார்ந்து உருவாகியிருக்கும் இப்படத்தை பார்த்த இயக்குநர்கள் வெற்றிமாறன், பா. ரஞ்சித், நடிகர் சிவகார்த்திகேயன், இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட பலரும் வெகுவாக பாராட்டியிருந்தனர்.

ஹர்பஜன் சிங்
‘நீ பொட்டு வச்ச தங்கக் குடம்..’ லப்பர் பந்து படத்தில் விஜயகாந்த் பாடல் வைத்தது ஏன்? இயக்குநர் பதில்!

படத்தை பாராட்டிய ஹர்பஜன் சிங்..

கிரிக்கெட் கதையம்சம் கொண்ட படங்கள், அதன் கதைக்களத்தை விட்டு வெளியே செல்லாமல் எதார்த்தமாக முடிவடைந்தது இதுவே முதல்முறை என்று ’லப்பர்-பந்து’ படத்தை இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் பாராட்டியிருந்தார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியிருந்த நிலையில், தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் சுழற்பந்துவீச்சாளருமான ஹர்பஜன் சிங், அவருடைய பாணியில் பிரத்யேகமாக தமிழில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் ஹர்பஜன் சிங், “என்னோட அடுத்த தமிழ் பட Direction டீம் சொன்னாங்க "சார் லப்பர்-பந்து னு ஒரு படம் வந்துருக்கு., கிராமத்து கிரிக்கெட் சப்ஜெக்ட் சும்மா அட்டகாசமா இருக்கு பாருங்கனு". கிரிக்கெட் மேல நீங்க வெச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா” என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங்
"மாட்டிறைச்சி உண்பதை காட்ட அவர்கள் விரும்பவில்லை.." - OTT நிர்ணயிக்கும் வரம்பு குறித்து வெற்றிமாறன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com