வைக்கம் விஜயலட்சுமி வாழ்க்கைக் கதையில் ’கேரள அரசின் மகள்’!

வைக்கம் விஜயலட்சுமி வாழ்க்கைக் கதையில் ’கேரள அரசின் மகள்’!
வைக்கம் விஜயலட்சுமி வாழ்க்கைக் கதையில் ’கேரள அரசின் மகள்’!
Published on

பார்வையற்ற பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் மீன் விற்று கல்லூரியில் படிக்கும் ஹனன் ஹமீது நடிக்கிறார்.

பிருத்விராஜ் நடித்த ’ஜே.சி.டேனியல்’ படத்தில் இடம்பெற்ற ’காற்றே காற்றே’ என்ற பாடல் மூலம் தமிழில் பாடகியாக அறிமுகமானவர் வைக் கம் விஜயலட்சுமி. பார்வையற்றவரான விஜயலட்சுமி இந்த பாடல் மூலம் பிரபலமானார். இதையடுத்து ’வீர சிவாஜி’ படத்தில் ’சொப்பன சுந்தரி நான் தானே’, ’என்னமோ ஏதோ’ படத்தில் ’புதிய உலகை புதிய உலகை’ உட்பட தமிழில் பல பாடல்களை பாடியுள்ளார். தமிழ், மலையாளத்தில் தனது வித்தியாசமான குரல் மூலம் பிரபலமான இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நின்றது. இந்நிலையில் இவரது வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது. இதை விஜயகுமார் இயக்குகிறார். இந்தப் படத்தில் விஜயகுமாரியாக, ஹனன் நடிக்கிறார். 

இந்த ஹனன், கல்லூரி சென்றுவிட்டு மாலை நேரத்தில் மீன் விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றும் மாணவி. இவர் தொடர்பான கட்டுரை மாத்ருபூமி நாளிதமிழில் வெளியானது. இதையடுத்து இவருக்கு பாராட்டுகள் குவிந்தன. சில சினிமா இயக்குனர்கள் அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்தனர். 

இந்நிலையில் ஹனன் பப்ளிசிட்டிக்காக இப்படி செய்கிறார் என்று அவரை கடுமையாக சிலர் விமர்சித்தனர். இந்த விவகாரம் கேரள முதல்வர் வரை சென்றது. அவர், ஹனனை பாராட்டி ’ஹனன் கேரள அரசின் மகள்’ என்று கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து ஹனனை மோசமாக விமர்சித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அவர், வைக்கம் விஜயலட்சுமி வாழ்க்கை கதையில் நடிக்க இருக்கிறார். இதுபற்றி ஹனன் கூறும்போது, ‘அது உண்மைதான். இந்தப் படத்தில்எனக்கு சவாலான கேரக்டர். படம் பற்றி இப்போது எதுவும் என்னால் சொல்ல முடியாது’ என்றார்.

இந்தப் படத்துடன், ’அரை கள்ளன் முக்கால் கள்ளன்’, ’மிட்டாயி தெரிவு’, ’விரல் 2019’ ஆகிய படங்களிலும் ஹனன் நடிக்கிறார். 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com