கோவையில் படமான ’பீரியட்’ ஆவணக்குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது!

கோவையில் படமான ’பீரியட்’ ஆவணக்குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது!
கோவையில் படமான ’பீரியட்’ ஆவணக்குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது!
Published on

ஆஸ்கர் விருது விழாவில், இந்திய பெண்களை பற்றிய படமான ’பீரியட்: எண்ட் ஆப் சன்டன்ஸ்’ (Period. End of Sentence) -க்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

91 வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி ஸ்டூடியோவில் கோலாகலமாக இப்போது நடந்து வருகிறது. இதில், ஆவணக் குறும்பட விருது Period. End of Sentence என்ற படத்துக்கு கிடைத்துள்ளது. இது மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளை இந்திய பெண் கள் எப்படி எதிர்த்து போராடுகிறார்கள் என்பதை பற்றிய படம். கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் உருவாக்கிய மலிவு விலை நாப்கினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம், கோவை உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் படமாகியுள்ளது. இந்தியாவின் பல பகுதி களில் உள்ள பெண்கள், இதில் பங்கேற்று பேசியுள்ளனர்.

இதில், கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் பேட்டியும் இடம்பெற்றுள்ளது. மாதவிடாய் பிரச்னை காலத்தில், இந்திய கிராமத்து பெண்கள் என்ன மாதிரியான அவஸ்தைகளை சந்திக்கிறார்கள் என்பது பற்றியும் இந்த படம் பேசுகிறது. 

இந்த ஆவணக் குறும்படத்ஜ்தை ராய்கா ஜெஹ்தாப்ஜி (Rayka Zehtabchi) என்ற அமெரிக்க பெண் இயக்குனர் இயக்கியுள்ளார். மெலிசா பெர்டான் (Melissa Berton) தயாரித்துள்ளார். சாம் டேவிஸ் ஒளிப்பதிவு செய்து எடிட் செய்துள்ளார். இந்த படத்துக்காக அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருதை Rayka Zehtabchi-வும் Melissa Berton-ம் பெற்றுக்கொண்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com