‘கல்லி பாய்க்கு மட்டும் 13 விருதுகளா?’ - சர்ச்சைக்குள்ளான ஃபிலிம்பேர் விருது.

‘கல்லி பாய்க்கு மட்டும் 13 விருதுகளா?’ - சர்ச்சைக்குள்ளான ஃபிலிம்பேர் விருது.
‘கல்லி பாய்க்கு மட்டும் 13 விருதுகளா?’ - சர்ச்சைக்குள்ளான ஃபிலிம்பேர் விருது.
Published on

கடந்த பிப்ரவரி 15’ஆம் தேதி 65’வது பிலிம் பேர் விருதுகள் வழங்கும் விழா கவுஹாத்தியில் நடைபெற்றது. அவ்விழாவில் ஆலியாபட் மற்றும் ரன்வீர் சிங் ஆகிய இருவரும் நடித்த கல்லி பாய் திரைப்படம் 13 விருதுகளைப் பெற்றது. ஆனால், இது திரைத்துறையினர் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. கல்லிபாய் நல்ல படம் தான் ஆனால் 13 விருதுகள் பெறத்தகுதியான படம் அல்ல என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

கல்லிபாய் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குனர் சோயா அக்தர் சிறந்த இயக்குனருக்கான விருதினை பெற்றுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதினை ரன்வீர் சிங்கும், சிறந்த நடிகைக்கான விருதை ஆலியாபட்டும் பெற்றுள்ளனர். மேலும், சிறந்த துணை நடிகைக்கான விருது அம்ருதா சுபாசுக்கும் சிறந்த துணை நடிகருக்கான விருது சிதாந்த் சதுர்வேதிக்கும் கிடைத்துள்ளது. அது மட்டுமல்ல சிறந்த இசை, சிறந்த பாடல் வரிகள், சிறந்த திரைக்கதை மற்றும் வசனம் என 13 விருதுகளை கில்லியாக அள்ளி இருக்கிறான் கல்லி பாய்.

இந்நிலையில், அக்‌ஷய் குமார் நடித்த கேசரி மற்றும் ஹிர்திக் ரோசன் நடித்த சூப்பர் 30 போன்ற வெற்றிப் படங்கள் ஒரு விருதைக் கூட பெற முடியவில்லை. இதுவே #boycottfilmfare ட்ரெண்ட் ஆக துவக்கமாகிப் போனது.

கேசரி படத்தில் இடம்பெற்ற ‘தேறி மெட்டி’ என்ற பாடல் ‘கல்லி பாய்’ திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘அப்னா டைம் ஆகயா’ பாடலை விட எந்த வகையில் குறைந்து போனது...? என கேட்கின்றனர் பலர். உண்மையில் மனோஜ் முந்தாசரி எழுதிய ‘தேரி மெட்டி’ பாடல் தான் விருது பெறத் தகுதியானதே தவிர ‘அப்னா டைம் ஆகயா’ அல்ல என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

இது குறித்து, ‘தேரி மெட்டி’ பாடலின் பாடலாசிரியர் மனோஜ் முந்தாசரி மிகவும் விரக்தியடைந்திருப்பதாக தெரிகிறது. “என் வாழ்க்கையில் மீண்டும் தேரி மெட்டி போன்ற ஒரு  பாடலை எழுத முடியுமா எனத் தெரியவில்லை. அவ்வளவு நல்ல பாடல் அது. என்னுடைய தேரி மெட்டிக்கு விருது கிடைக்காமல் போனதால் விருதுகளின் மீதே எனக்கு நம்பிக்கை போய்விட்டது, இனி எந்த விருது வழங்கும் விழாவிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன்’ என அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com