ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை பரிந்துரைப்பதில், இந்திய அரசுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பகத்சிங்கின் நண்பரான உத்தம் சிங்கின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தில் பிரிட்டிஷ் ஆட்சி முறைக்கு எதிரான பல்வேறு கருத்துகள் இருந்ததால், ஆஸ்கர் பரிந்துரைக் குழு, அதனை நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகி வந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மனீஷ் திவாரி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.
ஆஸ்கர் விருதுகளை வழங்கி வரும் நிறுவனம், பெடரேஷன் ஆஃப் இந்தியா என்ற தேர்வுக் குழுவை வைத்துள்ளதாகவும், இந்தக் குழுதான் ஆஸ்கர் விருதுக்கான இந்தியத் திரைப்படங்களை பரிந்துரைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கும் இந்திய அரசுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
.