கோல்டன் குளோப் விருது: நாமினேஷன் பட்டியலில் 2 பிரிவுகளில் இடம் பிடித்த ‘ஆர்.ஆர்.ஆர்.’

கோல்டன் குளோப் விருது: நாமினேஷன் பட்டியலில் 2 பிரிவுகளில் இடம் பிடித்த ‘ஆர்.ஆர்.ஆர்.’
கோல்டன் குளோப் விருது: நாமினேஷன் பட்டியலில் 2 பிரிவுகளில் இடம் பிடித்த ‘ஆர்.ஆர்.ஆர்.’
Published on

2022-ம் வருடத்திற்கான கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் இடம்பிடித்து அசத்தியுள்ளது.

2022-ம் ஆண்டு முடிந்து, 2023-ம் ஆண்டு துவங்க இன்னும் 19 நாட்களே உள்ளன. இதையடுத்து இந்த ஆண்டு வெளிவந்த சிறந்தப் படங்களை தேர்ந்தெடுத்து, விருது வழங்கும் விழா உலகெங்கிலும் நடைபெற உள்ளது. குறிப்பாக திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், ஆஸ்கர் அகாடெமி விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது விளங்கி வருகிறது. Hollywood Foreign Press Association வழங்கும் இந்த விருது வழங்கும் விழா, வருகிற ஜனவரி மாதம் 10-ம் தேதி (இந்திய நேரப்படி ஜனவரி 11-ம் தேதி அதிகாலை) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்  நடைபெற உள்ளது.

இதையடுத்து இன்று சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம், ஆங்கில மொழி அல்லாத படம், சிறந்த பாட்டு உள்பட பலப் பிரிவுகளில் இறுதியாக பரிந்துரை செய்யப்பட்டதில் 5 இடங்களை பிடித்த பட்டியல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதில் ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், ஆங்கில மொழி இல்லாத படத்திற்கான பிரிவிலும், அந்தப் படத்தின் மிகவும் பிரபலமான ‘நாட்டு நாட்டு’ பாடல், சிறந்த பாடல் பிரிவிலும் தேர்வாகியுள்ளன.

ஆலியா பட்டின் ‘கங்குபாய் கத்தியவாடி’, ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’, ‘செல்லோ ஷோ’ ஆகியப் படங்களும் இந்த விருதுக்கு அனுப்பப்பட்ட நிலையில், கடைசியில் ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் மட்டுமே நாமினேஷனில் இடம்பிடித்துள்ளது. ஜனவரி 10-ம் தேதி நடக்கும் விழாவில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் விருது பெறுமா இல்லையா என்பது தெரியவரும். ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்திற்காக வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com