பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து காயத்ரி ரகுராம் இன்று வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஓவியா வெளியேறிய பின்னர் பிக்பாஸ் வீட்டிற்குள் அடுத்தடுத்து 3 பிரபலங்கள் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் காயத்ரி அல்லது ரைசா இவர்களில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என்றும், இதில் காயத்ரி வெளியேற அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ’வெளியில போய் எல்லாரையும் செஞ்சிடுவேன்’ என்ற காயத்ரியின் வசனம் நெட்டிசன்கள் மத்தியில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
முன்னதாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள காயத்ரி ரகுராம், ‘சேரி பிகேவியர்’ என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. தாழ்த்தப்பட்ட மக்களை அவதூறாக பேசியதாகக் கூறி 100 கோடி ரூபாய் கேட்டு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.