மன்னிப்பு கேட்கிறேன்: ஆனால் கார்த்திக் இப்படி செய்யலாமா?: கெளதம் மேனன் விளக்கம்
‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் நரேன். இவரது ‘நரகாசூரன்’ தற்போது தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் அரவிந்த் சாமி கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் பெரிய இடைவெளிக்குப் பின் ஸ்ரேயா சரண் மீண்டும் நடித்திருக்கிறார். இப்படத்தை கெளதம் மேனன் தயாரித்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கும் கெளதம் மேனனுக்கும் இடையில் ஏதோ உரசல் இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் கார்த்திக் நரேன் சர்ச்சையான ஒரு ட்விட்டை பதிவிட்டார். அதில், “பலர் என்னிடம் அறிவுரைக் கூறினாலும் நான் உங்களை நம்பினேன். ஆனால் நீங்கள் என்னை குப்பையைப்போல நடத்தினீர்கள். கடைசியில் நாங்களே முதலீடு செய்ய வேண்டியதாக இருந்தது. தயவு செய்து இப்படி யாரையும் இனி ஏமாற்றாதீர்கள்” என்று கருத்திட்டார்.
இந்நிலையில் தற்போது கெளதம் மேனன் இரண்டு பக்கத்தில் அவரது விளக்கத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் நராகசூரன் படம் வெளிவர பல நேர்மையான விஷயங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் கார்த்திக் நரேன் பதிவிட்ட ட்வீட் என்னை மிகவும் காயப்படுத்தியது. இதனால் ஊடகங்களில் இருந்து வரும் ஃபோன் கால் என்னை மிகவும் வேதனையடைய செய்கிறது. நானும் கார்த்தியின் ட்வீட்க்கு ரிப்ளே செய்திருக்கக்கூடாது. அதற்காக கார்த்தியிடம் மன்னிப்பு கேட்கிறேன். கார்த்தி என்னிடம் பேசாமல் அவர் இப்படி செய்திருக்கக்கூடாது.
இதன்மூலம் படத்தின் மீது தேவையில்லாத ஒரு கவனம் வந்துவிட்டது. இந்தப்படத்தில் நான் ஒரு இயக்குநராக எதிலும் தலையீடவில்லை. அவரது ஸ்க்ரிப்ட் வொர்க்கில் கூட ஒரு படைப்பாளியாக நான் எதையும் கூறவில்லை.அவருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. இந்தப்படத்திற்காக அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களை கூட யோசிக்காமல் ஒப்பந்தம் செய்தோம்.
இந்த படத்துக்காக பங்குதாரர் மூலம் பல கோடி பணத்தை முதலீடு செய்துள்ளோம். கார்த்திக் இந்த படத்தை விட்டு என்னை போக சொன்னாலும் சந்தோசமாக செல்கிறேன். யாராலும் படம் வெளியாவதை தடுக்க முடியாது. நரகாசூரன் படம் வெளி வருவதற்கான வேலைகள் நடந்து வருகிறது கூடிய விரைவில் படம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்