நாளைய தீர்ப்பு to லியோ! தொடக்ககால அவமானங்களை கடந்து 31 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த விஜய்!

சினிமாவில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல..!! அதற்கு கடின உழைப்பும்.. விடாமுயற்சியும் தேவை.. தன் விடாமுயற்சியாலும் - கடின உழைப்பாலும் தமிழ் சினிமாவில் 31 ஆண்டுகளாக கோலோச்சி வருகிறார் நடிகர் விஜய்.
31 years of vijayism
31 years of vijayismfile image
Published on

தமிழ் சினிமாவில் விஜய் அடைந்துள்ள வெற்றி என்பது சாதாரணமானதல்ல, 1984'ல் வெளிவந்த வெற்றியில் தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் ’Super Star’ (இப்போதைக்கு தளபதிதான்,, அவரே சொன்னதுபோல்) என்று சொல்லும் அளவிற்கு உச்சத்தை தொட்டு நிற்கிறார் விஜய். 1984'ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 6 படங்களுக்கு பிறகு 1992'ல் ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அவதாரம் எடுத்தார். தனது மகனின் தீராத சினிமா பசிக்கு தீணி போடத்தொடங்கியவர் அவரது தந்தை எஸ்.ஏ.சிதான்.

31 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகனின் வளர்ச்சி இப்படிப்பட்டதாக இருக்கும் என்று நாளைய தீர்ப்பை இயக்கிய S.A.சந்திரசேகர் கூட நினைத்திருக்கமாட்டார். - அந்த அளவிற்கு விஜய்யின் வளர்ச்சி ஒவ்வொருவரையும் மலைக்கவைத்துள்ளது. இந்த வெற்றிக்கு பின்னால் விஜய் சந்தித்த அவமானங்கள் கொஞ்சநஞ்சமல்லை 500, 600 கோடி வசூல் சாதனை என தமிழ் சினிமாவை இன்று உலகமே திரும்பி பார்க்கிறது என்றால் அதற்கு பின்னால் விஜயின் படங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. சமீபத்தில் வெளியான அவரது லியோ படம் 620 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக சிலாகித்து வருகிறது ரசிகர் படை.

31 years of vijayism
“ஆதரவு தாருங்கள்” - அடுத்தக்கட்ட பயணத்தில் லோகேஷ் கனகராஜ்; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சினிமாவில் மட்டுமல்லாமல் தம்மால் முடிந்த உதவிகளை விஜய் மக்கள் இயக்கம் மூலமாக செய்து வருகிறார். குறிப்பாக கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் திரையரங்குகளை நோக்கி ரசிகர்கள் வருவார்களா என்ற எதிர்பார்ப்பை உடைத்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது விஜயின் மாஸ்டர் திரைப்படம். இப்படி தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என தொடர்ந்து வெளிநாடுகளிலும் சாதனை படைத்து உச்சத்தை தொட்டு வருகிறது விஜயின் திரைப்படங்கள்.

நடிகர் விஜய் திரைத்துறையில் நாயகனாக கால் பதித்து காதல் - Action - நகைச்சுவை - Sentiment என கிடைக்கும் கேப்பில் எல்லாம் ஸ்கோர் செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்து வருகிறார். சினிமாவில் வெற்றிகரமாக 31 ஆண்டுகளை கடந்துள்ள விஜய்யின் பயணம் மேலும் வெற்றிபெற வாழ்த்துவோம்.

திருப்பு முனையை ஏற்படுத்திய திரைப்படங்கள்!

நாளைய தீர்ப்பு படம் மூலம் விஜய் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் அவரை ஒரு நடிகராக பெரிய அளவில் அங்கீகரித்த திரைப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக. விக்ரமன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் மூலம் விஜய்க்கு பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரீச் கிடைத்தது. அதேவரிசையில் அதே பாணியில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து 1997ல் வெளியான காதலுக்கு மரியாதையும், 1999ல் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படமும் விஜய்யின் மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்தியது.

குஷி, பிரண்ட்ஸ் என பல வெற்றிப்படங்கள் இருந்தாலும் லவ் பாய் ஆக இருந்த விஜய்யை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது திருமலை திரைப்படம். 2003ம் ஆண்டில் வெளியான திருமலை படம் தான் விஜய்யை ஆக்‌ஷன் ஹீரோ ஆக உயர்த்தியது. அதற்கு அடுத்து 2004ல் வெளியான கில்லி படமும், 2007ல் வெளியான போக்கிரி படமும் விஜய்யை அக்மார்க் ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது. இடையில் பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார் விஜய்.

துப்பாக்கியில் ஆரம்பித்த புதிய பயணம், வசூல் ரீதியாக விஜய்யை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றது. துப்பாக்கியை தொடர்ந்து கத்தி, மெர்சல், தெறி என பல வெற்றிப்படங்களை கொடுத்துக் கொண்டே இருந்தார் விஜய். திரைப்படங்களின் உருவாக்கம் சுமாராக இருந்தாலும் விஜய்க்காகவே அந்தப் படங்கள் வசூல் வேட்டை நடத்தியது. கடைசியாக வெளியான லியோ வரை அவரை ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு கொண்டு சென்றுள்ளது.

எழுத்து - துர்கா பிரவீன் குமார்

31 years of vijayism
"நன்றியும் அன்பும்"- திருமண உறவிலிருந்து வெளியேறிய நடிகை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com