தமிழ் சினிமாவில் 80- களில் அறிமுகமான ஹீரோ, ஹீரோயின்கள் ஒவ்வொரு வருடமும் சென்னை, ஐதராபாத் என ஏதாவது ஒரு இடத்தில் கூடி சந்தித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இங்கு தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டு விருந்தில் கலந்துகொள்வார்கள். இந்தச் சந்திப்பு கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது.
இதில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி, அம்பரீஷ், மோகன், வெங்கடேஷ், சுகாசினி, லிசி, ராதிகா, சுமலதா, பானுசந்தர், அர்ஜூன், ரமேஷ் அரவிந்த், சரிதா, சுமன், அம்பிகா, ரம்யா கிருஷ்ணன், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் கலந்துகொள்வது வழக்கம். இந்த வருடம் இவர்கள் தங்கள் மீட்டிங்கை சீனாவில் நடத்த உள்ளனர். ஜூன் முதல் வாரம் இந்தச் சந்திப்பு நடக்கிறது.
யார், யார் இதில் கலந்துகொள்கிறார்கள் என்பது தெரியவில்லை. ரஜினிகாந்த் படப்பிடிப்பில் இருப்பதால் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்று தெரிகிறது.