விக்ரம் பிரபுவின் அடுத்தப்பட அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக முத்தையா இயக்கத்தில் ‘புலிக்குத்தி பாண்டி’ படம் வெளியானது. அதனைத்தொடர்ந்து, தற்போது ‘டாணாக்காரன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை இயக்கவிருப்பவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த தமிழ். இவர், அசுரன் படத்திலும் சில காட்சிகளில் நடித்திருப்பார்.
சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பான காவல்துறையினரை ‘டாணாக்காரன்’ என்றுதான் அழைப்பார்கள். போஸ்டரிலும் விக்ரம் பிரபு அதே கெட்டப்பில் இருக்கிறார். இந்த டாணாக்காரன் கம்பீரமாய் தெரிந்தாலும் பரிதாபத்தை ஏற்படுத்துகிறார். தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதை என்பதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்படத்தை, தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தயாரிக்கவிருக்கிறார்.