ஓடிடியாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் பார்வையாளர்களை உட்கார வைப்பதற்கான பார்முலா தான் இயக்குநர்களுக்கு தேவை என்று இயக்குநர் சிம்புதேவன் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும் போது இயக்குநர் சிம்புதேவன் பேசும்போது, “என்னைப் பொருத்தவரை இயக்குநர்களுக்கு என்று ஒரு பார்மெட் கிடையாது. அது ஓடிடியாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் பார்வையாளர்களை உட்கார வைப்பதற்கான பார்முலா தான் தேவை. ‘கசடதபற’ வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது. திரையரங்கில் என்ன ரெஸ்பான்ஸ் கிடைக்குமோ அது இப்படத்திற்கும் கிடைத்தது. சினிமாவில் பயணிக்கும்போது அடிப்படையான விஷயங்கள் என்னென்ன என்று அனுபவத்தில் தான் தெரியும்.
‘சாணிக்காயிதம்’, ‘டாணாக்காரன்’, ஆங்கிலத்தில் ‘ரெட் நோட்டீஸ்’. ‘சாணிக்காயிதம்’ இயக்குநரை பிடித்திருக்கிறது. ‘மாநாடு’ படத்தில் சிம்புவின் நடிப்பு பிடித்திருந்தது. ‘ராக்கெட்ரி’ படத்தில் மாதவன் நடிப்பும், ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நித்யா மேனனின் நடிப்பும் பிடித்திருந்தது” இவ்வாறு அவர் கூறினார். தனியார் நிறுவன சேனல் நடத்திய மொபைல் குறும்படப் போட்டியின் வெற்றியாளர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்வு சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் நடுவர்களாக இயக்குநர் வஸந்த், இயக்குநர் சிம்புதேவன் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கலந்துகொண்டு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கினார்கள். அதில் தான் இயக்குநர் சிம்புதேவன் இவ்வாறு கூறினார்.