நடிகை அரை நிர்வாண போராட்டம்: பணிந்தது தெலுங்கு திரையுலகம்!

நடிகை அரை நிர்வாண போராட்டம்: பணிந்தது தெலுங்கு திரையுலகம்!
நடிகை அரை நிர்வாண போராட்டம்: பணிந்தது தெலுங்கு திரையுலகம்!
Published on

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், நடிகை மீதான தடையை தெலுங்கு நடிகர் சங்கம் நீக்கியுள்ளது. 

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சமீபத்தில் குற்றம்சாட்டி இருந்தார் நடிகை ஸ்ரீரெட்டி. அந்தத் திரைப் பிரபலங்களின் பெயர் பட்டியலை, ஸ்ரீ லீக்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தி ல் வெளியிடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் சங்கம், அவர் நடிப்பதற்கான அங்கீகார அட்டையை ரத்து செய்துவிட்டது. தெலுங்கு நடிகர்கள் யாரும் இவருடன் பணியாற்ற மாட்டார்கள் என்றும் கூறியது.

இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தெலுங்கு பிலிம்சேம்பர் முன்பு, ஸ்ரீரெட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினார். இதனால் அவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, இயக்குனர் சேகர் காமுலா மீது புகார் கூறினார். அடுத்து, நடிகர் ராணாவின் தம்பியும் தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனுமான அபிராம் டகுபதி தன்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று கூறி பரபரப்பைக் கிளப்பினார். இந்தச் சூடு மறைவதற்குள் தெலுங்கு திரையுலகின் முன்னணி ஸ்கிரிப்ட் ரைட்டரும் இயக்குனருமான கோனா வெங்கட் மீதும் புகார் கூறினார். இது தெலுங்கு திரையுலகில் மேலும் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று தெலங்கானா தலைமை செயலாளர் மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை செயலர் ஆகியோர் 4 வார காலத்துக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கிடையே தெலுங்கு பிலிம்சேம்பர், ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார் குறித்து விசாரிக்க கமிட்டி ஒன்றை அமைக்க இருப் பதாகக் கூறியுள்ளது. ’இன்னும் நான்கு நாட்களில் இந்த கமிட்டி அமைக்கப்படும். இதில் 20 பேர் உறுப்பினர்களாக இருப்பார் கள். 10 பேர் திரைத்துறையில் இருந்தும் மற்றவர்கள் வேறு துறைகளில் இருந்தும் நியமிக்கப்படுவார்கள்’ என்றும் தெரிவித்துள்ளது.

அதோடு தெலுங்கு நடிகர் சங்கம், நடிகை மீதான தடையை நீக்கியுள்ளது. இதுபற்றி தெலுங்கு நடிகர் சங்கத் தலைவர், சிவாஜி ராஜா கூறும்போது, ’நடிகை கூறிய சில குற்றச்சாட்டுகள் சில உறுப்பினரை காயப்படுத்தியதால் அவருக்கு தடை விதித்தோம். இப்போது பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டுவிட்டதால் அவருக்கான தடையை நீக்கிவிட் டோம். அவரோடு மற்றவர்கள் பணிய புரியவும் அனுமதி வழங்கியுள்ளோம்’ என்றார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com